ETV Bharat / city

உடல்நலக் குறைவால் பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி! - ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை

ஆலங்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

dmk mla poongothai aaladi aruna hospitalized, dmk mla poongothai aaladi aruna, பூங்கோதை ஆலடி அருணா மருத்துவமனையில் அனுமதி, ஆலங்குளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் பூங்கோதை, alangulam mla poongothai
பூங்கோதை ஆலடி அருணா
author img

By

Published : Nov 19, 2020, 1:21 PM IST

திருநெல்வேலி: ஆலங்குளம் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் பூங்கோதை ஆலடி அருணா. திமுக கட்சியில் பெண் சட்டப்பேரவை உறுப்பினர்களில் மிகவும் துடிப்பானவர் என அறியப்படுபவர். குறிப்பாக சட்டப்பேரவை விவாதத்தின்போது, துணிச்சலாக சபாநாயகரை எதிர்த்து கேள்வி கேட்பவர்.

இச்சூழலில், இன்று திடீரென உடல்நிலை சரியில்லாமல் திருநெல்வேலி சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதிகளவில் மருந்து உட்கொண்டதால், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் பூங்கோதை உடல்நிலை குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகியுள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.