ETV Bharat / city

சிறையில் இருந்து வந்த திமுக நிர்வாகிக்கு ராட்சத மாலையுடன் உற்சாக வரவேற்பு - கொலை முயற்சி வழக்கில் சிறை

சிறையில் இருந்து வந்த திமுகவை சேர்ந்த ஊராட்சி மன்ற துணை தலைவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்து அவரது தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சிறையில் இருந்து வந்த திமுக நிர்வாகிக்கு கிரைன் மூலம் ராட்சச மாலையுடன் உற்சாக வரவேற்பு

author img

By

Published : Oct 16, 2022, 2:40 AM IST

திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் சிறை சென்று திரும்பிய திமுகவை சேர்ந்த தூத்துக்குடி பத்மநாபமங்கலம் ஊராட்சி மன்ற துணை தலைவரான வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு வைகுண்ட பாண்டியன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. அந்த ஆடியோவில் அமைச்சரை வைகுண்ட பாண்டியன் மிக கடுமையான கெட்ட வார்த்தைகளால் பேசியிருப்பார்.

இந்த சூழலில் வைகுண்ட பாண்டியன் திடீரென கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அமைச்சர் விவகாரத்தில் தான் வைகுண்ட பாண்டியன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

இந்நிலையில் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த வைகுண்ட பாண்டியன் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கேடிசி நகர் வழியாக திருச்செந்தூர் சாலை வரை உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

கிரேன் மூலம் ராட்சச மாலை அணிவிக்கும் வீடியோ

குறிப்பாக சீனிவாசன் நகர் அருகில் திருச்செந்தூர் சாலையில் வைத்து வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் ராட்சச மாலை அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வாழ்க கோஷம் எழுப்பினர்.

ஆளுங்கட்சி அமைச்சரை மிரட்டி சிறைக்கு சென்று வந்த ஆளுங்கட்சி ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு முதலமைச்சரின் வரவேற்பையே மிஞ்சும் வகையில் ஆதரவாளர்கள் கொடுத்த இந்த வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் தரப்புக்கும் வைகுண்ட பாண்டியனுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் தனக்கும் அதிக செல்வாக்கு இருப்பதை காட்டிக் கொள்ளும் வகையிலேயே இந்த வரவேற்பு சம்பவம் நடைபெற்றதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: சத்யாவிற்கு நேர்ந்த துயரத்தால் நொறுங்கிப் போய்விட்டேன் - முதல்வர் உருக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.