திருநெல்வேலி: இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருள் சூழ்ந்து காணப்பட்டது. மேலும், பிற்பகல் 12.30 மணி அளவில் இடி மின்னலுடன் கனமழை பெய்ய தொடங்கியது.
இதனையடுத்து, நெல்லை டவுன், நெல்லை சந்திப்பு, வண்ணாரபேட்டை, பாளையங்கோட்டை, கேடிசி நகர், என்ஜிஓ காலனி, பெருமாள்புரம், தச்சநல்லூர், மேலப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. கனமழையால் சாலையில் நீர் பெருக்கெடுத்து தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ளது.
இதேபோன்று மாவட்டத்தின் பிற பகுதிகளான நாங்குநேரி, வள்ளியூர், அம்பாசமுத்திரம், களக்காடு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்துவருகிறது.
இதன் விளைவாக நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் பிற்பகல் முதல் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். அதேசமயம் தொடர்ந்து மழை நீடித்துவருவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டிற்கு அழைத்துவர சிரமப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:'நவ. 29இல் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும்'