ETV Bharat / city

'இழப்பை சரி செய்ய ஆவின் பொருள்கள் ஏற்றுமதி' - பால்வளத்துறை அமைச்சர் - stalin

திருநெல்வேலி : ஆவின் பால் விலை குறைப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்ய, ஆவின் மதிப்பு கூட்டுப் பொருட்களை கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தெரிவித்துள்ளார்.

பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர், சாமு நாசர்,
dairy-minister-pressmeet-about-exporting-aavin-value-added-products
author img

By

Published : May 31, 2021, 12:01 PM IST

திருநெல்வேலி மாவட்டத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆவின் பார்லர்கள், ஆவின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை ஆய்வு மேற்கொள்ள பால்வளத்துறை அமைச்சர் சா.மு நாசர் இன்று (மே 30) திருநெல்வேலி சென்றார்.

அதன்படி, பாளையங்கோட்டை நீதிமன்றம் எதிரே உள்ள ஆவின் பார்லர், டவுண் நெல்லையப்பர் கோவில் அருகே உள்ள ஆவின் பார்லர், மேலப்பாளையம், அரசு பொறியியல் கல்லூரி ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள பார்லர்களையும் அமைச்சர் ஆய்வு செய்தார்.

அங்கு நடைபெறும் விற்பனைகளின் விபரம், வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் விலை ஆகியவற்றை முகவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் ரெட்டியார்பட்டியில் உள்ள ஆவின் உற்பத்தி நிலையத்தின் பால் பாக்கெட்டுகள் தயார் செய்யும் இடம், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயார் செய்யும் இடங்கள் ஆகியவற்றையும் நேரில் பார்வையிட்டார்.

பந்தய குதிரைகளாக செயல்படுகிறோம்!

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "ஊரடங்கு காலத்தில் தேவையான அத்தியாவசியப் பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முதலமைச்சர் உத்தரவின்படி தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பணிகள், களப்பணிகளைச் செய்து பந்தயக் குதிரை வேகத்தில் செயல்பட்டு வருகிறோம். இதன்மூலம், கரோனா நோயைத் தடுத்திடும் முயற்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றி கண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டு வரும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளைக் கண்டு அனைத்து மாநிலங்களும் பாராட்டி வருகிறன. ஊரடங்கு காலத்தில் மிகவும் அத்தியாவசியத் தேவையான பால், உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் கொள்முதல் செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு விற்பனை செய்வது குறித்து தமிழ்நாடு முழுவதும் ஆய்வு பணிகள் நடந்து வருகிறது.

270 கோடி இழப்பு

இழப்பை சரி செய்ய ஆவின் பொருள்கள் ஏற்றுமதி

முதலமைச்சர் உத்தரவின் பெயரில், ஆவின் பால் விலை ரூபாய் மூன்று குறைக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. குறைக்கப்பட்ட விலையைவிட கூடுதலான விலையில் விற்பனை செய்த சென்னையில் உள்ள 11 கடைகளும், தஞ்சாவூரில் உள்ள இரண்டு கடைகளும் சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆவின் நிறுவனம் தற்போது லாபகரமாக இயங்கி வருகிறது. ஆவின் பால் லிட்டருக்கு மூன்று ரூபாய் விலை குறைக்கப்பட்டதால், அரசுக்கு ரூ.270 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

வருவாயை பெருக்க ஏற்றுமதி

அந்த இழப்பை சரி செய்யும் விதமாக உற்பத்தியை கூட்ட திட்டமிட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் நாளொன்றுக்கு 36 லட்சம் லிட்டராக இருந்தது, தற்போது 39 லட்சமாக விற்பனை உயர்ந்துள்ளது . மேலும், ஆவின் நிறுவன வருவாயை அதிகரிக்க பத்தாண்டுகளுக்கு முன்பு திமுக ஆட்சியில் கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகளுக்கு ஆவின் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

கடந்த அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் கிழக்கு, மேற்கு ஆசிய நாடுகளுக்கு மதிப்புக் கூட்டப்பட்ட ஆவின் பொருள்களை ஏற்றுமதி செய்து வருவாயை உயர்த்த திட்டமிட்டுள்ளோம், ஆவின் பால் பொதுமக்களை கூடுதலாக சென்று சேரும் வகையில் கூடுதல் விற்பனை நிலையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'ஆவின் பால் பண்ணையில் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் நடவடிக்கை பாயும்'

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.