தென்காசி: தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் காரணமாக பல கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு, தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
தற்போது அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில் பூங்காக்கள், சுற்றுலாத்தலங்கள் போன்றவைகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றால அருவிகளில் குளிக்க முடியாததாலும், நேற்று (அக்.4) விடுமுறை தினம் என்பதாலும் உள்ளூர் மக்கள், சுற்றுலா பயணிகள் தடையை மீறி மேற்குதொடர்ச்சி மலையையொட்டி உள்ள அணையின் மறுகால் பகுதியில் குளிக்க படையெடுக்கத் தொடங்கினர்.
![Courtallam to remain closed covid-19 pandemic Courtallam falls குற்றாலத்தில் குளிக்க தடை நீட்டிப்பு கோவிட்-19 பெருந்தொற்று](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tki-03-dam-police-security-7204942-hd_04102020213239_0410f_02484_1057.jpg)
இதையும் படிங்க: கல்வராயன் மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு