ETV Bharat / city

பத்திரிகையாளர் 15 பேருக்கு கரோனா!

திருநெல்வேலியில் பத்திரிகையாளர்கள் 15 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Apr 30, 2021, 5:17 PM IST

Corona infection
Corona infection

தமிழ்நாட்டில் கரோனா தொற்றின் பரவல் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், வாக்கு எண்ணும் மையத்திற்குச் செல்லும் அலுவலர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்பட அனைவரும் கட்டாயம் கரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் அல்லது தடுப்பூசி இரண்டு தவணை போட்டிருக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

அதன்பேரில், தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் பத்திரிகையாளர்களுக்குச் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில், திருநெல்வேலி மாவட்டத்தில் நேற்று(ஏப்.29) நடைபெற்ற கரோனா பரிசோதனை முகாமில் நூற்றுக்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் இன்று (ஏப்.30) வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் நெல்லை மாவட்டத்தில் 15 பத்திரிகையாளர்களுக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, முன்னணி டிவி சேனலில் பணிபுரியும் செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள் ஐந்து பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர சிறிய பத்திரிகைகளைச் சேர்ந்த செய்தியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கையாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. மேலும் தொற்று உறுதி செய்யப்பட்ட 15 பத்திரிகையாளர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.