தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ந்தேதி நடக்கிறது. இதனையொட்டி திருநெல்வேலி மாவட்டத்தில் பணப்பட்டுவாடா, பரிசுப்பொருட்கள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் 24 மணிநேரமும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் .
மேலும், மக்கள் அச்சம் இன்றி வாக்களி்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் கொடி அணிவகுப்பும் நடந்து வருகிறது. இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாளையங்கோட்டை, திருநெல்வேலி, நாங்குநேரி , ராதாபுரம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 தொகுதிகளுக்கான வாக்குபதிவு இயந்திரங்கள் திருநெல்வேலி ராமையன்பட்டியில் உள்ள தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு வளாகத்தின் தனி அறையில் பாதுகாப்பாக உள்ளது.
இதிலிருந்து தேர்தல் நெருங்குவதையொட்டி, தேர்தலில் பணியாற்றும் அரசு பணியாளர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காகவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் வகையிலும் தொகுதிக்கு 18 வாக்குபதிவு இயந்திரங்கள் வீதம் ஆட்சியர் விஷ்ணு முன்னிலையில் பிரித்தெடுக்கும் பணி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதிக்கான வாக்குபதிவு இயந்திரங்களை அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.
இதயும் படிங்க: வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து கருப்புக் கொடியேற்றி போராட்டம்!