தமிழ்நாடு முழுவதும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுப்பணித் துறை, நீர்வள ஆதாரத் துறையின் கீழ் குடிமராமத்து திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீர்நிலைகளை தூர்வாருவதால் மழை காலங்களில் வரும் தண்ணீரை வீணாக்காமல் குளங்களில் அதிகளவில் சேமிக்க முடியும்.
கடந்த நான்கு ஆண்டுகளாக தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் மூலம் குளங்கள் தூர்வாரப்படும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில, திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தொகுதி கலந்தபனை கிராமத்திலுள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான சன்னானேரி குளத்தை குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க அரசு சார்பில் ரூ. 40 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சன்னாநேரி குளத்தில் நடைபெற உள்ள குடிமராமத்து பணியை ராதாபுரம் சட்டப்பேரவை உறுப்பினர் இன்பதுரை இன்று தொடங்கி வைத்தார். இந்தக் குளத்தை தூர்வாருவதன் மூலம் பணகுடி, கலந்தபனை மற்றும் அதனை சுற்றியுள்ள விவசாயப் பெருமக்கள் பெரிதும் பயனடைவார்கள்.
இந்நிகழ்ச்சியில், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: மக்களிடம் சகோதரத்துவத்துடன் நடந்து கொள்ளுங்கள் - ஏ.கே. விஸ்வநாதன் உருக்கம்