திருநெல்வேலி: டிக் டாக் மோகத்தால் பூனையை தூக்கில் தொங்கவிட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
டிக் டாக் செயலில் நாள்தோறும் பல விசித்திரமான காணொலிகள் வெளிவந்த வண்ணம் உள்ளன. தற்போது ஊரடங்கு என்பதால் டிக் டாக் செயலிக்கு மவுசு கூடியுள்ளது. சமையல் குறிப்பு, அழகு குறிப்பு என பலரும் பலவிதமான காணொலிகளை பதிவிட்டு லைக்ஸ் வாங்கி வருகிறார்கள். அதே சமயம் டிக் டாக் மோகம் பலரையும் சிக்கலில் சிக்க வைக்க தவறுவதில்லை.
‘என்னை தேடி வந்த பெண்களுடன் ஜாலியாக இருந்தேன்’ - காசியின் வாக்குமூலம்
அந்த வகையில் நெல்லை மாவட்டம் பழவூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட செட்டிக்குளத்தைச் சேர்ந்த தங்கதுரை என்பவர் மாட்டுப் பண்ணை தொழில் செய்து வருகிறார். டிக் டாக் மீது மோகம் கொண்டுள்ள இவர், தான் வளர்த்த பூனையை தூக்கிலிட்டு அதை டிக் டாக்காக எடுத்து பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் குவிய தொடங்கியுள்ளன.
அதேசமயம் இதுகுறித்து திருநெல்வேலி மிருகவதை தடுப்புப் பாதுகாப்பு இயக்கத்திற்கு தகவல் கிடைக்க அவர்கள் தங்கதுரை மீது பழவூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் அடிப்படையில் மிருக வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் தங்கதுரையை கைது செய்த காவல் துறையினர், அவரை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் பிற டிக் டாக் லைக்ஸ் விரும்பிகள் மத்தியில் பீதியை கிளப்பியுள்ளது.