திருநெல்வேலி : திருநேல்வேலி மாவட்டம் உவரி புகழ்பெற்ற உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோயில் தைப்பூச திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு திருவிழா கடந்த 9ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஒன்பதாம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெறும். இந்தத் தேர் திருவிழாவில் தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் கலந்து கொள்வார்கள்.
இந்நிலையில் தற்போது கரோனோ பரவல் காரணமாக தமிழ்நாடு அரசு ஊரடங்கு மற்றும் கோயில்கள் திறப்பதற்கும், நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கும் தடை செய்துள்ளது. இதனால் உவரி கோயிலில் தேரோட்டம் நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ளது.
இந்நிலையில், தேரோட்டத்தை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி நாகர்கோவில் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆர் காந்தி மற்றும் திருநெல்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் சார்பாக 200க்கும் மேற்பட்டோர் உவரி கோயில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அலுவலர்கள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் தைத்தேர் உற்சவம்