தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அடுத்த மாயமான் குறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 28). இவர் கடந்த ஓராண்டிற்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த சாராள் என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார்.
சாராள் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார்.அவருக்கு பெற்றொர் இல்லாததால் வளைகாப்பு நடைபெறவில்லை. இந்த சூழலில் திடீரென வலி ஏற்பட்டதால் அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு பிரசவம் தாமதமாகும் எனவும் அதுவரை மருவத்துவமனையிலேயே அவர் சிகிச்சை பெறும்படியும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இந்நிலையில், கருப்பசாமி தனது காதல் மனைவிக்கு மருத்துவமனையிலேயே வைத்து வளைகாப்பு நடத்தியுள்ளார்.
செவிலியர்கள் மிகுத்த பாசத்துடன் சாராளுக்கு வளையல்கள் அணிவித்து ஆசிர்வாதம் செய்தனர். பிரசவத்திற்கு வந்த இடத்தில் அரசு மருத்துவமனையில் வைத்து தனது காதல் மனைவியின் வளைகாப்பு ஆசையை நிறைவேற்றிய கருப்பசாமியின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க; சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வி