ETV Bharat / city

ஒண்டிவீரனுக்கு பிறந்தநாளா? நினைவுநாளா? என்று குழம்பிய அமமுக நிர்வாகியால் சிரிப்பலை - சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன்

ஒண்டிவீரன் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமமுக தென் மண்டல பொறுப்பாளர் மாணிக்கராஜா, பிறந்த நாளா? நினைவு நாளா ? என்று தெரியாமல் குழம்பியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

ஒண்டிவீரனுக்கு பிறந்தநாளா? நினைவுநாளா? என்று குழம்பிய அமமுக நிர்வாகியால் சிரிப்பலை

author img

By

Published : Aug 21, 2022, 4:08 PM IST

நெல்லை: சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 251ஆவது நினைவு தினத்தையொட்டி, பாளையங்கோட்டை அடுத்த சமாதானபுரத்தில் உள்ள அவரது மணிமண்டபத்தில் நேற்று (ஆக.20) பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அந்த வகையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் கட்சியின் தலைமை நிலைய செயலாளரும் தென் மண்டல பொறுப்பாளருமான மாணிக்கராஜா சக நிர்வாகிகளுடன் மணிமண்டபத்துக்கு வந்து ஒண்டிவீரன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

ஒண்டிவீரனுக்கு பிறந்தநாளா? நினைவுநாளா? என்று குழம்பிய அமமுக நிர்வாகியால் சிரிப்பலை

அதைத்தொடர்ந்து அவர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது மாவீரன் ஒண்டிவீரன் என்று ஆரம்பித்து, ஒண்டிவீரனுக்கு பிறந்தநாளா? நினைவு நாளா? என்று குழம்பி பேச்சை நிறுத்திவிட்டார். உடனிருந்தவரும் பிறந்தநாள் என்று தவறாகக் கூறவே மாணிக்கராஜாவும், தனது கட்சிக்காரரை மலைபோல் நம்பி ஒண்டிவீரன் பிறந்த நாளுக்கு மாலை அணிவிக்க வந்தோம் என்று கூறிவிட்டார். இதையடுத்து அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் நினைவு தினம் என்று கூறியதும், தவறான தகவலை கொடுத்த நிர்வாகியை பார்த்து டென்ஷனாக ஒரு முறைமுறைத்தார். இதனால் அங்கு சிரிப்பலை ஏற்பட்டது.

இதையும் படிங்க: சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரனின் சொந்த ஊரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.