திருநெல்வேலி மாநகரில் பெய்து வந்த தொடர் கனமழை காரணமாகவும், மாநகராட்சியின் குடிநீர் திட்டப் பணிகளினாலும் சாலைகள் குண்டும் குழியுமாக நீர் தேங்கி காணப்படுகிறது. அதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி உள்ளனர்.
இந்த நிலையில் பொங்கல் பண்டிகை காரணமாக கூட்டம், போக்குவரத்து நெரிசல் பன்மடங்கு அதிகரித்துவிட்டது. அதனால் இன்று திருநெல்வேலி சந்திப்பு முதல் வழுக்கோடைவரை சுமார் 5 கி.மீ. தூரம் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், அந்த போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய ஆம்புலன்ஸ் ஒன்று விரைவாக செல்லமுடியாமல் சிக்கியது.
அதன் காரணமாக அதிலிருந்த மாரடைப்பு நோயாளி ஒருவர் உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாமல், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். இதுகுறித்து பொதுமக்கள், மாநகர் பகுதியில் போக்குவரத்து நெரிசலை மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சி நிர்வாகமும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சாலைகளில் கலைநிகழ்ச்சி மேடைகள்: அதிமுகவினரால் அவதியுறும் சென்னைவாசிகள்!