ETV Bharat / city

ஒரே நாடு, ஒரே தேர்தலை அதிமுக வரவேற்கிறது - வைகைச் செல்வன்

திமுகவினர், 100 நாள் சாதனை என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற முடியாமல் தடுமாறி வருகின்றனர் என்று கூறிய அதிமுக நிர்வாகி வைகைச் செல்வன், ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டத்தை அதிமுக வரவேற்கிறது என்று தெரிவித்துள்ளார்.

வைகைச் செல்வன்
வைகைச் செல்வன்
author img

By

Published : Aug 22, 2021, 9:20 PM IST

திருநெல்வேலி: அதிமுக இலக்கிய அணி ஆலோசனைக் கூட்டம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் முன்னாள் அமைச்சரும், அதிமுகவின் இலக்கிய அணிச் செயலாளருமான வைகைச் செல்வன் கலந்துகொண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக, நிர்வாகிகள், தொண்டர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர், "உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுக்கு உற்சாகம் ஏற்படுத்துவதற்காகவே, இந்தக் கூட்டம் நடத்தப்பட்டது.

உள்ளாட்சித்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 100 நாட்கள் சாதனை என்று சொல்லிக்கொள்ளும் திமுக, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் தடுமாறி, தடம்மாறி கொண்டிருக்கிறது. எனவே, இந்த நேரத்தில் அதிமுகவுக்குத் தான் தங்களின் வாக்கு என்ற நம்பிக்கையை மக்கள் வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதிமுக நிர்வாகிகள் மீது, குறிப்பாக முன்னாள் அமைச்சர்கள் மீது தொடர்ச்சியாக வழக்குப்பதிவு செய்து, மிரட்டும் தொனியை திமுக கையாண்டு வருகிறது.

அதிமுக இந்த மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்சாது. இதுபோன்ற வழக்குகளை நீதிமன்றத்தில் சந்திப்போம் என்று எங்கள் தலைவர்கள் ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அதிமுக அமைச்சர் வைகைச் செல்வன் பேட்டி

கரோனா இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதால், தற்போது பள்ளிகளைத் திறக்க உள்ளனர். ஐம்பது விழுக்காடு மாணவர்களை வைத்து பள்ளிகள் நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இருப்பினும் பள்ளிகள் திறக்கும் அறிவிப்பு குறித்து அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.