திருநெல்வேலி: நெல்லை டவுணில் நீண்ட நாள்களாக பொதுமக்கள் வசிக்கும் பகுதியின் அருகே உள்ள கழிவு நீர் ஓடைகளில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் அடைத்திருந்தால் தண்ணீர் வெளியே செல்லாமல் வீடுகளுக்கு முன்னே அடைத்திருந்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி இருந்தனர்.
சில நேரங்களில் வீடுகளின் முன்பே கழிவுநீர் பெருக்கெடுத்து ஓடும். இதுகுறித்து, நேரடியாக மாநகராட்சி சென்று மனு கொடுக்கும்போது அவ்வப்போது மட்டும் ஓடைகள் சரிசெய்யப்பட்டு வந்தது. இருந்த போதும் நிரந்தரமாக சீர் செய்யபடவில்லை.
நெல்லை மாநகராட்சி தேர்தலில் மொத்தம் 55 வார்டுகளில் அதிமுக 4 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றனர். அதில் 28ஆவது வார்டை சேர்ந்த சந்திரசேகரும் ஒருவர். அவர் தனது வார்டு பகுதியை இன்று (மார்ச் 8) காலை ஆய்வு செய்தபோது, அவரிடம் அப்பகுதி மக்கள் சிலர் கழிவு நீர் மாசுபாட்டை போக்க வேண்டி கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அதன் அடிப்படையில், கட்டளை பள்ளி தெருவில் கழிவு நீர் ஓடையில் அடைப்புகள் சரிசெய்யும் பணியினை மாநகராட்சி பணியாளர்கள் கொண்டு சீர்செய்யும் பணியினை மேற்கொண்டார். அங்கு சிமெண்ட் தளத்தை உடைக்க அவரது சொந்த செலவில் ஆட்களை வரவைத்தார். அவரே இப்பணியினை மேற்கொண்டு கழிவு நீர் அடைப்பை சரிசெய்து மக்களின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
இதையும் படிங்க: உக்ரைனில் இருந்து உடனே... உடனே வெளியேறவும் - இந்தியத் தூதரகம்