நெல்லை: கடந்த 2011ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வியை அமல்படுத்த கோரி நெல்லையில் திமுக இளைஞரணி சார்பில் நடைபெற்ற சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. . அதில் தற்போதைய நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் கலந்துகொண்டு கைதானார்.
அப்போது அவர் திமுக இளைஞர் அணியில் பொறுப்பு வகித்து வந்தார். இந்த நிலையில் இந்த போராட்டம் தொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி மேயர் சரவணன் உள்பட போராட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
அதன்படி மேயர் சரவணன் உள்பட பத்துக்கும் மேற்பட்ட திமுக நிர்வாகிகள் நேற்று நெல்லை மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஜேஎம் 1இல் ஆஜராகினர். வழக்கு விசாரித்த நீதிபதி அடுத்த மாதம் 21ஆம் தேதி விசாரணையை ஒத்தி வைத்தார் இதையடுத்து மேயர் சரவணன் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
இதையும் படிங்க: வடகிழக்குப்பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்...நெல்லை மாவட்ட கண்காணிப்பு அலுவலர்