திருநெல்வேலி: மன்னார்புரம் இந்திரா நகர் காலனியைச் சேர்ந்த ஆறு வயது சிறுவன் நிஷாந்த். இவர் தன் நண்பர்களுடன் சேர்ந்து தனது வீட்டின் அருகேயுள்ள வீட்டு வாசல் இரும்புக் கதவின் மீது ஏறி விளையாடியுள்ளார்.
அப்போது வீட்டின் சுவர் திடீரென இடிந்து சிறுவனின் முதுகு மற்றும் கால் பகுதியில் விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது. சிறுவன் மீது சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தை நேரில் பார்த்த பென்சியால் என்பவர் உடனடியாக சிறுவனை திசையன்விளையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.
சிறுவன் உயிரிழப்பு
சிறுவன் நிஷாந்தை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே அவர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற திசையன்விளை காவல் துறையினர் சிறுவனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Suicide Prevention: அதிகரித்துவரும் தற்கொலைகளைத் தடுப்பது எப்படி?