ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காடு மலைக்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். தற்போது கரோனா நோய்த்தொற்று காரணமாக பல்வேறு கெடுபிடிகள் கடைப்பிடிக்கப்படுவதால் ஏற்காட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்நிலையில் ஏற்காடு செல்லும் பிரதான பாதையின் அருகே உள்ள பாறை அருகே இளைஞர் ஒருவர் மரத்தின் கிளையில் தூக்கில் தொங்கியபடி இருந்ததைப் பார்த்த வாகன ஓட்டிகள் உடனடியாக காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து விரைந்து வந்த ஏற்காடு காவல் துறையினர் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த நபர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர், தற்கொலை செய்துகொண்டாரா அப்படியென்றால் அதற்கான காரணம் என்ன அல்லது இது கொலைச் சம்பவமா, இரவு நேரத்தில் பாறையின் உச்சிக்கு இளைஞர் எப்படி சென்றார், அவரை யாரேனும் அழைத்துச் சென்று கொலை செய்தனரா என்பது குறித்தும் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.