சேலம்: தமிழ்நாடு முழுவதும் பெண் காவல் உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்ய எழுத்துத்தேர்வு நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்குப் பல்வேறு மாவட்டங்களில் இன்று உடல் தகுதித்தேர்வு நடத்தப்பட்டது.
சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்களுக்கு சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் உள்ள சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் உடல் தகுதித்தேர்வு நடைபெற்றது. இதில், 413 பேர் கலந்து கொண்டனர். இவர்களில் 80 பேர் தற்போது காவல் நிலையங்களில் பணியாற்றும் பெண் காவலர்கள்.
இந்தத் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடக்காமல் இருக்க, அனைத்துப் பகுதிகளிலும் நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது. தேர்வை சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்முல் ஹோடா, சேலம் துணை ஆணையர் லாவண்யா ஆகியோர் கண்காணித்தனர். இன்று சான்றிதழ் சரிபார்ப்பு, 400 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டத்தேர்வுகள் நடந்த நிலையில், நாளை நீளம் தாண்டுதல், 100 மீட்டர் ஓட்டம், 200 மீட்டர் ஓட்டம் உள்ளிட்டத் தேர்வுகள் நடைபெற உள்ளன.
இதையும் படிங்க:குரூப் 1 தேர்வில் ஒரு இடத்திற்கு 3,443 பேர் போட்டி