கரூர் மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதைக் கட்டுப்படுத்துவதற்காக நகரத்தின் வெளிப்புறத்தில், அதாவது சேலம் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து புறவழிச்சாலை மூலம் கரூர் புகைவண்டி நிலையம் வரையிலாக, சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் வரையிலான பாலம் கட்டுமானப் பணிகள் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக, பல்வேறு தடைகளைத் தாண்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது.
தற்சமயம் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் காரணமாக, பாலத்தின் பணிகள் முடங்கி இருந்தன. நேற்று கரூர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு தளர்வு ஏற்பட்டதால், நிலுவையிலுள்ள பாலத்தின் கட்டுமானப் பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கர் ஆய்வு மேற்கொண்டார்.
அவருடன் நகராட்சி ஆணையர் சுதா உடனிருந்தார். இங்கு கட்டப்பட்டு வரும் பாலத்திற்கு 'அம்மா சாலைப்பாலம்' என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
சாலையில் மயங்கிக் கிடந்த பெண்ணுக்கு தக்க சமயத்தில் உணவளித்த காவலர்கள்!