சேலம் வீரபாண்டி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 583 மனுக்களை சேலம் மாவட்ட ஆட்சியரிடம், மக்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது அரசு அலுவலர்கள் உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தனர். பொதுமக்களிடம் இருந்து அதிக அளவில் பட்டா வேண்டுதல், குடிநீர் வசதி, தெருவிளக்கு, ஓய்வு ஊதியம் உள்ளிட்ட மனுக்கள் வருவதாகக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழ்நாட்டில், குடிமராமத்து திட்டப் பணிகள் முற்றிலும் நடைபெறவில்லை எனக் குற்றஞ்சாட்டினார். மேலும், சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பனமரத்துப்பட்டி ஏரி, சுமார் 2 ஆயிரத்து 886 ஏக்கர் பரப்பளவில் கருவேல மரங்களால் வீணாகி உள்ளது. இந்த ஏரியைத் தூர்வார, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.