ETV Bharat / city

ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க தமாகா தீர்மானம் - சேலம் தமாகா தலைவர் சுசீந்திரகுமார் பேச்சு

சேலம்: ஓமலூர் பகுதியில் புதிதாக ரயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

சேலம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டம்
author img

By

Published : Oct 22, 2019, 5:40 AM IST

சேலம் மாவட்டம் ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட 21ஆவது நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் உட்பட 200க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

சேலம் ஓமலூரில் தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டம்

இதில் பேசிய சுசீந்திரகுமார், எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, முதலமைச்சர் பழனிசாமி தலைமையிலான அரசுடன் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

உள்ளாட்சித் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ், அதிமுக இடையேயான கூட்டணி தொடரும் என்ற ஜி.கே.வாசன் முடிவை வரவேற்கும் விதமாகவும், புதியதாக உதயமாகி இருக்கும் காடையாம்பட்டி தாலுகாவிற்கு பத்திரப்பதிவு அலுவலகம் வேண்டும் ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையும் படியுங்க:

ஸ்டாலின் சீமானை ஆதரிக்கிறாரா? - தமாகா இளைஞரணி தலைவர் கேள்வி

Intro:போக்குவரத்து நெரிசல் மிகுந்த ஓமலூர் பகுதியில் புதியதாக ரயில்வே மேம்பாலம் அமைத்திட வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியினர் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.Body:சேலம் மாவட்டம் ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸின் 21வது மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது...

சேலம் மாவட்டம், ஓமலூர் தனியார் திருமண மண்டபத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட 21வது நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் கலந்துகொண்டு பேசினார்.

இதில் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் சார்பில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு, கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என்றார் .

தொடர்ந்து பேசிய அவர் அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக தமிழ் மாநில காங்கிரஸ் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசுடன் இணைந்து பாடுபடும் என்றும் தெரிவித்தார்.

பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் நாராயணன்
மறைவுக்கு மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

உள்ளாட்சித் தேர்தலிலும் தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் அஇஅதிமுக இடையேயான கூட்டணி தொடரும் என்ற ஜி.கே.வாசன் முடிவினை வரவேற்கும் தீர்மானம், புதியதாக உதயமாகி இருக்கும் காடையாம்பட்டி தாலுகாவிற்கு பத்திரப்பதிவு அலுவலகம் மற்றும் ஓமலூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் தீர்மானமாக நிறைவேற்றப்பட்டது.

Conclusion:
இந்நிகழ்ச்சியில் 200க்கும் மேற்பட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.