ETV Bharat / city

திருமணத்தை மீறிய உறவால் கணவர் கொலை - மனைவி உள்பட மூவருக்கு ஆயுள் தண்டனை

சேலத்தில் திருமணத்தை மீறிய உறவால் ஏற்பட்ட தகராறில் கணவரை கொலை செய்த மனைவி உள்பட மூன்று பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

திருமணத்தை மீறிய உறவால் கணவர் கொலை
திருமணத்தை மீறிய உறவால் கணவர் கொலை
author img

By

Published : Aug 18, 2021, 10:32 PM IST

சேலம்: தலைவாசல் அருகே புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி (42). இவரது மனைவி ஆலயமணி (33). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயமணி, தனது மகன்களுடன் கோயிலுக்கு சென்றிருந்தபோது வீட்டில் தனியாக இருந்த கலியமூர்ததி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

திருமணத்தை மீறிய உறவு

இது தொடர்பாக தலைவாசல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அப்போது ஆலயமணி மீது சந்தேகம் உள்ளதாக உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் அவரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டுநர் தேன்குமார் (31) என்பவருக்கும், ஆலயமணிக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. பின்னர் கணவருக்குத் தெரியவந்ததையடுத்து அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஆலயமணி, தேன்குமார், அவரது நண்பர்கள் ஹரிகிருஷ்ணன் (19), 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து கலியமூர்த்தியை கொலை செய்ததது தெரியவந்தது.

இரட்டை ஆயுள் தண்டனை

பின்னர் மூவரும் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்தனர். இந்த வழக்கு சேலம் முதலாவது மாவட்ட, அமர்வு நீதிமன்றத்தில் தொடர்ந்து விசாரணை நடந்து வந்த நிலையில் இன்று (ஆகஸ்ட் 18) தீர்ப்பு வழங்கப்பட்டது.

அதில் ஆலயமணி, தேன்குமார், அவரது நண்பர் ஹரிகிருஷ்ணன் ஆகிய மூவருக்கும் இரட்டை ஆயுள் தண்டனையும், தலா 4 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி ஆபிரகாம் லிங்கன் தீர்ப்பளித்தார். மேலும் 17 வயது சிறுவன் மீதான வழக்கு, சேலம் சிறார் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதையும் படிங்க: திருமணத்தை மீறிய உறவு - கணவரை கொலை செய்த மனைவி உள்பட 2 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.