சேலம் கோட்டை ஸ்ரீ பெரிய மாரியம்மன் திருக்கோயில் மிகவும் பிரசித்திப்பெற்றது. இந்தக் கோயில் முழுவதும் இடிக்கப்பட்டு தற்போது திருப்பணி நடைபெற்றுவருகிறது. மேலும், கோயில் முழுவதும் சிற்பங்கள் செதுக்கிய கல் தூண்களாலும் கற்களாலும் பாரம்பரிய முறைப்படி கருவறை, ஆலய திருப்பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இதன் முக்கிய நிகழ்வாக அம்மன் கருவறை வாசற்கால் வைக்கும் நிகழ்ச்சி இன்று அதிகாலை நடைபெற்றது. அப்போது நாதஸ்வர இசை முழங்க, அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கல்தூண்களான கருவறை வாசலுக்கு பூசாரி சிவா சிறப்பு பூஜைகள் செய்தார். பிறகு கருவறையில் வாசக்கால் நிறுத்தப்பட்டது. இதில் திரளான பக்தர்கள், இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.