சேலம் மாநகரப் பகுதியிலுள்ள சந்தைப்பேட்டையில் அரசு மதுபானக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்தப் பகுதியில் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை நூற்றுக்கணக்கான மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர்.
இச்சூழலில் அரசு மதுபானக்கடையில் மது வாங்கி வழியிலேயே குடித்துவிட்டு பள்ளிகளுக்குச் சென்று வரும் மாணவ மாணவியரை வழிமறித்து, அவர்களின் சட்டைப் பையிலிருக்கும் பணத்தை பிடுங்கிக் கொண்டு குடிமகன்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாகத் திடுக்கிடும் புகார் எழுந்துள்ளன.
சாதி மறுப்புத் திருமணம் செய்த தம்பதி: பாதுகாப்பு வேண்டி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா!
மேலும் மாணவர்களை சிகரெட், தின்பண்டங்களை வாங்கி வந்து தங்களுக்கு கொடுக்குமாறு போதை ஆசாமிகள் தினமும் அவர்களை வற்புறுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இதனை விசாரிக்கச் சென்ற மாணவ - மாணவியரின் பெற்றோர்களுக்கு போதை ஆசாமிகள் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தெரியவந்துள்ளது.
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்குத் தண்டனை அறிவிப்பு!
இவ்விவகாரம் தொடர்பாக சந்தைப்பேட்டை பகுதி காவல்துறையினருக்குப் பலமுறை மாணவர்களும் பெற்றோரும் புகாரளித்துள்ளனர். அந்தப் புகாரின் மீது காவல்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரிகிறது. இதனையடுத்து இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், போதை ஆசாமிகளால் தினந்தோறும் தொல்லைக்கு ஆளாகும் மாணவ மாணவியர் புகார் மனு அளித்தனர்.
சுட்டுக்கொல்லப்பட்டவரின் குழந்தையைத் தத்தெடுத்துக் கொள்ளும் ஐஜி!
அம்மனுவில், 'பள்ளிக்குச் செல்லும் போதும், திரும்பி வீட்டுக்கு வரும்போதும் டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு வழியில் நிற்கும் போதை ஆசாமிகள் எங்களிடம் வரம்பு மீறி செயல்படுகின்றனர். சட்டைப் பையிலுள்ள பணத்தை பறித்துக் கொள்கின்றனர். சிகரெட், தின்பண்டம் வாங்கி வர வற்புறுத்துகின்றனர். இதனால் பள்ளிக்கு நிம்மதியாகச் செல்ல முடியவில்லை.
பாதுகாப்பாக வீட்டிற்குத் திரும்பி வர முடியவில்லை. வகுப்பில் பாடத்தை கவனிக்க முடியவில்லை. கடுமையான மன உளைச்சலில் இருக்கிறோம். எனவே, ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து பள்ளிக்கு அருகாமையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றி, போதை ஆசாமிகளிடமிருந்து எங்களைக் காப்பாற்ற வேண்டும்" என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.