ETV Bharat / city

திமுக ஆட்சி 2024இல் முடிவுக்கு வரும்! - எடப்பாடி பழனிசாமி - opposition leader palanisamy

திமுக அரசு எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அதனைச் சட்டப்படி எதிர்கொள்வோம் என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும் என்றார்.

ஸ்டாலின் அரசு பொம்மை அரசு  எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்  நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்  cm stalin government toy government  opposition leader palanisamy  protest against ruling party
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்
author img

By

Published : Dec 17, 2021, 4:30 PM IST

சேலம்: மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஒரு பொம்மை அரசு என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் பேசினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத மக்கள் விரோத திமுக அரசைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என அதிமுக தலைமை அறிவித்திருந்தது.

அதன்படி இன்று (டிசம்பர் 17) அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்துகொண்டனர்.

விடியாத அரசு

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்து எதிர்க்கட்சித் தலைவரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கண்டன உரை ஆற்றினார். அப்போது அவர், "திமுக ஆட்சி பொறுப்பேற்று ஏழு மாதங்களாகின்றன. தேர்தல் வாக்குறுதிகளாக 525 வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டு ஒருசில வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

முக்கிய வாக்குறுதிகளாக அறிவிக்கப்பட்ட தேசியமயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி, இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், முதியோர் உதவித்தொகை உயர்வு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, சுய உதவிக் குழுக்களுக்கு தேசிய வங்கிகளில் கடன் தள்ளுபடி போன்ற எந்த வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

மக்களின் பிரதான பிரச்சினையான பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தை திமுக அரசு கட்டுப்படுத்தவில்லை. தேர்தல் அறிக்கையில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்று வாக்குறுதிகளை அளித்துவிட்டு, தமிழ்நாட்டு மக்களை வஞ்சித்து விடியாத அரசாக திமுக அரசு செயல்பட்டுவருகிறது.

ஸ்டாலின் பொம்மை முதலமைச்சர்

வாக்குகளை வாங்குவதற்காக கவர்ச்சிகரமான தேர்தல் அறிக்கை அளித்துவிட்டு ஏமாற்றும் அரசாகச் செயல்பட்டுவருகிறது. கட்டுமான தொழிலில் பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுவருகின்றனர்.

சிமென்ட் விலையை உயர்த்திய திமுக அரசு அதனைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமான பொருள்களை அத்தியாவசிய பொருள்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும். அப்போதுதான் விலை குறையும். ஏழை எளிய மக்களுக்காக அதிமுக அரசில் தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தை மூடும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டுவருகிறது.

இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது. அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி கொடுக்காமல் ஏமாற்றிவரும் அரசாகவும் திகழ்ந்துவருகிறது இந்த அரசு. தற்போது உள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஒரு பொம்மை முதலமைச்சராக இருக்கிறார்.

2024இல் முடிவுக்கு வரும் திமுக ஆட்சி

வேண்டுமென்றே முன்னாள் அமைச்சர்கள், அதிமுகவினர் மீது லஞ்ச ஒழிப்பு காவல் துறையை ஏவிவிட்டு பொய் வழக்குகளைப் போட்டு மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் செயல்பட்டுவருகிறது திமுக அரசு. எவ்வளவு அவதூறு பரப்பினாலும் அதனைச் சட்டப்படி எதிர்கொள்வோம்.

மத்திய அரசு அறிவித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறையில் வருகின்ற 2024ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவுக்கு வரும்" என்று தெரிவித்தார்.

திமுக ஆட்சி 2024இல் முடிவுக்கு வரும்

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அதிமுக மக்களவை உறுப்பினர் சந்திரசேகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம், சட்டப்பேரவை உறுப்பினர்கள், முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க:பள்ளியில் சுவர் இடிந்து 3 மாணவர்கள் உயிரிழப்பு: தமிழிசை இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.