சேலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சர்வதேச அளவிலான பிசியோதெரபி மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வெளிநாடு, வெளிமாநிலங்களிலிருந்து வந்திருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிசியோதெரபி மருத்துவர்களும், மாணவர்களும் கலந்து கொண்டு ஆய்வு அறிக்கைகளைச் சமர்ப்பித்தனர்.
அதனைத் தொடர்ந்து மாநாட்டில், “தமிழ்நாட்டில் இயங்கிவரும் பிசியோதெரபி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்களையும், விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய பணியிடங்களை உருவாக்க வேண்டும், தமிழ்நாடு மாநில பிசியோதெரபி கழகம் சட்டவரைவைக் கொண்டுவந்து, சட்டப்பேரவையில் நிறைவேற்ற வேண்டும்” ஆகிய மூன்று அம்ச தீர்மானங்கள் நிறைவேற்றினர்.
இந்த மாநாட்டில் வெவ்வேறு ஊர்களிலிருந்து மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.