ஈடில்லா இனிப்புக்கு சொந்தமான சேலத்து மாம்பழத்துக்கு அடுத்தபடியாக, இங்கு தயாரிக்கப்படும் வெல்லம் இனிப்புப் பிரியர்களின் இதமான தேர்வாக விளங்குகிறது. சேலத்தின் பிரத்தியேக தயாரிப்பான சுவை மிகுந்த வெல்லம், தமிழகம் மட்டுமல்லாது அண்டை மாநில மக்களின் இனிப்பு தேவையையும் நிறைவு செய்து வருகிறது.
தூய்மையான முறையில் கலப்படமில்லாமல் வெல்லம் தயாரிக்கப்படுவதால், சேலம் மாவட்ட வெல்லத்திற்கு எப்போதுமே தனி இடமுண்டு. அண்டை மாநிலமான கர்நாடகாவில் விற்பனையாகும் 90% சேலம் வெல்லம் தான். தற்போது பொங்கல் நெருங்கி வருவதால், வெல்லத் தயாரிப்பும் விற்பனையும் சூடுபிடித்துள்ளது. நாள்தோறும் பலரும் வந்து டன் கணக்கில் வெல்லம் வாங்கிச்செல்வதால், மொத்த விற்பனையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஏற்படுத்திய விழிப்புணர்வால் தற்போது கலப்பட வெல்லத் தயாரிப்பு என்பதே இல்லை என்று கூறும் விற்பனையாளர்கள், அதனால்தான் இந்த வெல்லத்திற்கு ஏக கிராக்கி என்றும் கூறுகின்றனர். கரோனா காலத்தில் வெல்ல விற்பனை மந்தமாயிருந்தாலும், தற்போது இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருப்பதால் போக்குவரத்திற்கு இடையூறு இன்றி ஏற்றுமதியும் விறுவிறுப்பாக நடைபெறுவதாக நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
தற்போது 30 கிலோ கொண்ட ஒரு சிப்பம் உருண்டை வெல்லம் ரூ. 1,300 முதல் ரூ.1,800 வரை விற்பனையாகிறது. செவ்வாய்பேட்டையில் இயங்கி வரும் வெல்ல மார்க்கெட்டிற்கு தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 70 முதல் 75 டன் வரை, வெல்லம் கொண்டுவரப்பட்டு விற்பனையாகிறது. கடந்த 10 மாதங்களாக முடங்கியிருந்த தொழில் தற்போது பழைய உற்சாகத்துடன் மேலெழுந்திருப்பது,க்k வெல்ல விற்பனையாளர்கள் மட்டுமின்றி விவசாயிகளையும் குதூகலமடைய செய்துள்ளது. இனிமை தொடரட்டும்.
இதையும் படிங்க: பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்ட ஆன்லைன்ல பாருங்க!