ETV Bharat / city

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி வாக்களியுங்கள் - கமல்ஹாசன்

சேலம்: தேர்தலானது ஒரு நாள் ஓட்டு போடும் நிகழ்வு அல்ல எனவும், உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்பதை விளக்கியும் பரப்புரை செய்வதாக சேலம் நாடாளுமன்றத்தொகுதி மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன் பேட்டியளித்துள்ளார்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி வாக்கிளியுங்கள் - மநீம வேட்பாளர் யுக்தி
author img

By

Published : Apr 5, 2019, 11:58 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்றத்தேர்தல் வாக்குப்பதிவு வரும் 18ஆம் நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி சுயேட்சை வேட்பாளர்கள் வரை அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத்தொகுதியில் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் பிரபு மணிகண்டன், ஈடிவி பாரத் தமிழ் செய்திகளுக்காக பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.

அப்போது அவர் பேசுகையில், "சேலம் நாடாளுமன்றத்தொகுதியை பொறுத்தவரையில் பொதுமக்கள் எங்களிடம் வைக்கும் பிரதான கோரிக்கை, அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதுதான்.

குப்பைகள் வாரப்படவில்லை, சாக்கடைகள் அடைத்துக் கிடக்கின்றன, மழைநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதே முக்கியமான பிரச்னையாக இப்போதும் இங்கு இருக்கிறது.

பிள்ளைகளின் எதிர்காலத்தை கருதி வாக்கிளியுங்கள் - மநீம வேட்பாளர் யுக்தி
அடுத்ததாக சாலை பிரச்னை. தேர்தல் நெருங்க, நெருங்க சேலம் நாடாளுமன்றத்தொகுதி முழுக்க சாலைகள் வேக வேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு இவை கண்டு கொள்ளப்படாமலே இருந்தது கவனிக்கத்தக்கது.எனவே மக்கள் நீதி மய்யம் பொதுமக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்னைகளை முன்னிறுத்தியே பரப்புரை செய்கிறது.திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டவை .அவர்கள் கல்விக் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்வோம் என்று கூறுகிறார்கள். எப்படி அதை ரத்து செய்வோம், அதற்காக எப்படி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பது பற்றியெல்லாம் தெளிவாக இல்லை.வலியுறுத்துவது என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும்தானா? என்றாவது எழுதிய கடிதங்களுக்கு பதில் வந்திருக்கிறதா? அந்த பதில் குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்து இருக்கிறதா? என்றால் இல்லை.இன்னொன்று ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்று தருவோம் என்பது. ஒரு கோடி பேருக்கு எந்த வழியில், எப்படி, எதன் அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெற்று தர இயலும் என்று அவர்கள் விளக்கமாக கூறவில்லை .திறன் இல்லாத நபரை எப்படி திறன் மேம்பாடு செய்வீர்கள்? திறன் மேம்பாடு அடைய என்ன நடவடிக்கை இதற்கு முன்பு எடுத்தீர்கள்? இதுபோல முழுமையான விளக்கம் இல்லாமல் பொதுவான வாக்குறுதிகளை அளிப்பதே அவர்களின் வாடிக்கை.இது போன்று பொதுவான வாக்குறுதிகளை வழங்காமல், இப்படித்தான் இருக்க வேண்டும், அதை இதுபோலத்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்பதை மையப்படுத்தி நாங்கள் வாக்குகள் சேகரிக்கிறோம்.அதே போல பெற்றோர்களிடம், இந்த தேர்தலானது ஒரு நாள் ஓட்டு போடும் நிகழ்வு அல்ல. உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்பதையும் விளக்கி பரப்புரை செய்கிறோம்.இன்னொன்று பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்பதையும் வாக்காளர்களிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது . நாங்கள் பேசுவதை முழுமையாகக் கேட்கும் மக்கள், கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். வரவேற்கிறார்கள்.எங்களுக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது. வாக்கு சேகரிப்பது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது. கண்டிப்பாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது" என்று கூறினார்.

Intro:சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பில் போட்டியிடும் பிரபு மணிகண்டன் இ டிவி பாரத் தமிழ் செய்திகளுக்காக பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

Body:வரும் 18ம் தேதி தமிழகம் முழுக்க நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதனையொட்டி தமிழகத்தின் பிரதான அரசியல் கட்சிகள் தொடங்கி சுயேட்சை வேட்பாளர்கள் வரை அனைத்து வேட்பாளர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு உள்ளனர்.

இந்நிலையில் சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் பரபரப்பாக வாக்கு சேகரிக்கும் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் பிரபு மணிகண்டன், இடிவி பாரத் தமிழ் செய்திகளுக்காக பிரத்தியேக பேட்டி அளித்தார்.

அந்த பேட்டியில் பிரபு மணிகண்டன்," சேலம் நாடாளுமன்றத் தொகுதியை பொறுத்தவரையில் பொதுமக்கள் எங்களிடம் வைக்கும் பிரதான கோரிக்கை அடிப்படை வசதிகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்பதே.

குப்பைகள் வாரப்படவில்லை, சாக்கடைகள் அடைத்துக் கிடக்கின்றன, மழைநீர் கால்வாய் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதே முக்கியமான பிரச்சினையாக இப்போதும் இருக்கிறது.

அடுத்ததாக சாலை பிரச்சனை. தேர்தல் நெருங்க நெருங்க சேலம் நாடாளுமன்ற தொகுதி முழுக்க சாலைகள் வேகவேகமாக அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு முன்பு கண்டுகொள்ளப்படாமலே இருந்தது கவனிக்கத்தக்கது.

எனவே மக்கள் நீதி மய்யம் பொதுமக்களின் தீர்க்கப்படாத அடிப்படை பிரச்சினைகளை முன்னிறுத்தியே பரப்புரை செய்கிறது.

திமுக, அதிமுக கட்சிகள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய்யான வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டவை .

அவர்கள் கூறுகிறார்கள் கல்விக் கடன்களை முற்றிலுமாக ரத்து செய்வோம் என்று. எப்படி அதை ரத்து செய்வோம் அதற்காக எப்படி மத்திய அரசை வலியுறுத்துவோம் என்பதெல்லாம் தெளிவாக இல்லை.

வலியுறுத்துவது என்றால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவது மட்டும்தானா ?. என்றாவது எழுதிய கடிதங்களுக்கு பதில் வந்திருக்கிறதா? அந்த பதில் குறித்து ஊடகங்களில் செய்தி வெளிவந்து இருக்கிறதா என்றால் இல்லை.

இன்னொன்று ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவோம் என்பது. ஒரு கோடி பேருக்கு எந்த வழியில் எப்படி எதன் அடிப்படையில் வேலை வாய்ப்பைப் பெற்றுத் தர இயலும் என்று அவர்கள் விளக்கமாக கூற வில்லை .

திறன் இல்லாத நபரை எப்படி திறன் மேம்பாடு செய்வீர்கள்? திறன் மேம்பாடு அடைய என்ன நடவடிக்கை இதற்கு முன்பு எடுத்தீர்கள்? இது போல முழுமையான விளக்கம் இல்லாமல் பொத்தாம்பொதுவான வாக்குறுதிகளை அளி ப்பதே அவர்களின் வாடிக்கை.

இதுபோன்று பொத்தம் பொதுவான வாக்குறுதிகளை வழங்காமல் இப்படித்தான் இருக்க வேண்டும், அதை இதுபோலத்தான் செயல்பாட்டுக்கு கொண்டு வருவோம் என்பதை மையப்படுத்தி நாங்கள் வாக்குகள் சேகரிக்கிறோம்.

அதேபோல பெற்றோர்களிடம் ஒரு நாள் ஓட்டு போடும் நிகழ்வு அல்ல இந்த தேர்தல். உங்களின் பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு வாக்களியுங்கள் என்பதை விளக்கி பரப்புரை செய்கிறோம்.

இன்னொன்று பணம் வாங்கிக்கொண்டு வாக்களிக்க வேண்டாம் என்பதையும் வாக்காளர்களிடம் நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.

செல்லும் இடமெல்லாம் எங்களுக்கு வரவேற்பு இருக்கிறது . நாங்கள் பேசுவதை முழுமையாகக் கேட்கும் மக்கள் கண்டிப்பாக மாற்றம் வேண்டும் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். வரவேற்கிறார்கள்.

எங்களுக்கு ஆதரவு அமோகமாக இருக்கிறது. வாக்கு சேகரிப்பது எங்களுக்கு மனநிறைவைத் தருகிறது.

கண்டிப்பாக ஜெயிப்போம் என்ற நம்பிக்கை இருக்கிறது|" என்று தெரிவித்தார்.

Conclusion:செல்லும் இடமெல்லாம் வாக்காளர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையே தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்று பிரபு மணிகண்டன் கூறுவது மக்கள் நீதி மயயத்தின் தலைவர் தொடங்கி அனைத்து தொண்டர்களுக்கும் ஒரு புது உத்வேகத்தை கொடுக்கும் எனலாம்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.