ETV Bharat / city

சேலத்தில் அதிக வட்டி ஆசைக்காட்டி பல கோடி மோசடி - தலைமறைவான நகைக் கடைக்காரர்!

சேலத்தில் நகைக்கும் பணத்திற்கும் அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாயை சுருட்டிக் கொண்டு தப்பி ஓடிய தனியார் நகை கடை உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.

பல கோடி மோசடி
பல கோடி மோசடி
author img

By

Published : Jan 27, 2022, 6:11 PM IST

சேலம்: சேலம் நகரில் ராஜகணபதி கோயில் அருகே உள்ள லலிதா மற்றும் அவரது கணவர் தங்கராஜ் ஆகியோருக்கு சொந்தமான லலிதாம்பிகை ஜுவல்லர்ஸ் சார்பில் தங்களிடம் நகை மற்றும் பணத்தை டெபாசிட் செய்தால் ஒரு பவுன் தங்கத்திற்கு மாதம் 600 ரூபாய் வட்டி வீதமும், ஒரு லட்சம் பணத்திற்கு மாதம் 2500 ரூபாய் வீதம் வட்டி வழங்கப்படும் என அறிவித்து, பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளை வாங்கியுள்ளார்.

இந்த நிலையில் சில மாதங்களாக அனைவருக்கும் உரிய வட்டி தொகையைக் கொடுத்து வந்த நகைக்கடை நிர்வாகம், திடீரென கடந்த 3 மாதங்களாக உரியத் தொகையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது குறித்து வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பணத்தைக் கேட்டு வந்த நிலையில் நகைக் கடையை காலி செய்துவிட்டு அதன் உரிமையாளர்கள் தலைமறைவாகி உள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த பாதிக்கப்பட்டவர்கள் பொன்னம்மாபேட்டை அருகே சக்தி நகரிலுள்ள தலைமறைவானவரின் உறவினர் வீட்டை முற்றுகையிட்டனர். இதையடுத்து சம்பவம் குறித்துத் தகவலறிந்த சேலம் டவுன் மற்றும் அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் மற்றும் நகைகளைச் சுருட்டிய தம்பதியினரைத் தேடி வருகின்றனர்.

பல கோடி மோசடி

சிசிடிவி காட்சியில் சிக்கினர்

இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு நகைக் கடையிலிருந்த அனைத்து ஆபரணங்களையும் காரில் ஏற்றிக்கொண்டு கடையை காலி செய்து விட்டு அதன் உரிமையாளர்கள் அங்கிருந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

சேலம் டவுன், பொன்னம்மாபேட்டை, அம்மாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வாடிக்கையாளர்களிடம் இருந்து சுமார் 4 கிலோ தங்கம் மற்றும் 4 கோடி அளவிலான பணத்தைப் பெற்றுக்கொண்டு நகைக்கடை உரிமையாளர்கள் தப்பி ஓடியுள்ளனர் எனத் தெரியவந்துள்ளது.

இதையும் படிங்க:ஒன்றிய அரசுப்பணிக்கு விருப்பமின்றி ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்செய்யப்பட உள்ளனரா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.