ETV Bharat / city

22,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு - ஆட்சியர் தகவல் - சேலம்

சேலத்தில் 22,500 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் செ கார்மேகம்
சேலம் மாவட்ட ஆட்சியர் செ கார்மேகம்
author img

By

Published : Jun 19, 2021, 10:41 PM IST

சேலம்: சேலம் மாநகராட்சி பகுதியில் 30 மையங்களிலும், மாவட்டத்தில் 92 மையங்களிலும் என மொத்தம் 122 மையங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

கடந்த வியாழக்கிழமை (ஜூன் 17) 30 ஆயிரம் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்ட நிலையில், தடுப்பூசி அனைத்தும் தீர்ந்துவிட்டதால் நேற்றும் (ஜூன் 18), இன்றும் (ஜூன் 19) பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படவில்லை. இதனால் தடுப்பூசி மையங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஐந்தாயிரம் தடுப்பூசி யாருக்கு?

இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம் கரோனா தடுப்பூசி தட்டுப்பாடு குறித்து கூறுகையில்," தற்போது இருப்பு வைக்கப்பட்டுள்ள 5 ஆயிரம் தடுப்பூசிகளை கொண்டு மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், தபால் நிலையங்களில் பணியாற்றுவோர், அவர்களது குடும்பத்தினர், ரயில்வே நிலையங்களில் பணியாற்றுவோர், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாளை தடுப்பூசி போடலாம்

சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையத்தில் தபால் நிலைய அலுவலர்கள், பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினர் ஆகியோருக்கு இன்று தடுப்பூசி செலுத்தப்பட்டது. சேலம் மத்திய சிறையில் உள்ள கைதிகள், சேலம் ரயில் நிலையத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் ஆகியோருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதனிடையே சேலம் சுகாதார மாவட்டத்திற்கு 17,000 தடுப்பூசி, ஆத்தூர் சுகாதார மாவட்டத்திற்கு 2,500 தடுப்பூசி என மொத்தம் 22,500 கோவிஷீல்டு தடுப்பூசி சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த தடுப்பூசிகள் அனைத்து மையங்களிலும் நாளை செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." என்றார்.

இதையும் படிங்க: ‘தம்பி வா தலைமை ஏற்க வா’ - விஜய் ரசிகர்கள் ஒட்டிய போஸ்டர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.