ETV Bharat / city

சேலம் தொகுதியில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த அதிமுக வேட்பாளர் - நாடாளுமன்றத்தேர்தல்

சேலம்: நாடாளுமன்றத் தேர்தலில் சேலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கே ஆர் எஸ் சரவணன் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தேர்தல்
author img

By

Published : Mar 25, 2019, 8:23 PM IST

நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அனல் பறக்கும் பரப்புரையில் ஈடுபட்டுள்ள கட்சித்தலைவர்கள், அந்தந்த தொகுதிகளில் வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில், சேலம் நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுக கட்சி சார்பில் போட்டியிடும் கே.ஆர்.எஸ். சரவணன், மாவட்டத் தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ரோகிணியிடம் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

இதன் பின்னர் செய்தியாளரிடம் பேசிய கேஆர்எஸ் சரவணன், "சேலம் நாடாளுமன்றத்தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவேன். தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் உதவியோடு பல்வேறு நலத்திட்டங்களை நிறைவேற்றுவேன்" என்று கூறினார்.

சேலம் நாடாளுமன்றத்தொகுதியில் திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன், நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ அம்மையப்பன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் பிரபு மணிகண்டன் ஆகியோர் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

Intro:சேலம் நாடாளுமன்ற வேட்பாளராக அஇஅதிமுக சார்பில் போட்டியிடும் கே ஆர் எஸ் சரவணன் இன்று சேலம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ரோகிணியிடம், தமது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.

Body:தமிழகத்தில் வரும் ஏப்ரல் 18-ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் , மாவட்ட தேர்தல் அலுவலர்களிடம் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக அதிமுக கூட்டணி சார்பில் கே. ஆர். எஸ்.சரவணன் போட்டியிடுகிறார்.

இதனையடுத்து அவர் இன்று மதியம் மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ரோகிணியிடம் தமது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அப்போது அவருடன் , அஇஅதிமுக சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் எம்எல்ஏ , பாரதிய ஜனதா கட்சியின் சேலம் மாவட்ட தலைவர் கோபி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் இரா. அருள், தேமுதிக மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

வேட்புமனுத் தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே ஆர் எஸ் சரவணன்," சேலம் நாடாளுமன்ற தொகுதி மக்களின் தேவையை அறிந்து அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் செயல்பட்டு தேர்தலில் வெற்றி பெறுவேன்.

தொகுதி மக்களின் முன்னேற்றத்துக்காக முதலமைச்சர் உதவியோடு பல்வேறு நல திட்டங்களை நிறைவேற்ற இருக்கிறோம்" என்று கூறினார்.

Conclusion:கடந்த 19ம் தேதி முதல் வேட்புமனுத்தாக்கல் நடைபெற்று வருகிறது . இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் சமர்ப்பித்து வருகின்றனர்.

இதுவரை திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ். ஆர். பார்த்திபன், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ராஜ அம்மையப்பன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரபு மணிகண்டன் ஆகியோர் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.