ETV Bharat / city

சாலைப் பாதுகாப்பு வாரவிழா விழிப்புணர்வுப் பேரணி

கிருஷ்ணகிரி: சாலைப் பாதுகாப்பு வாரவிழாவினை முன்னிட்டு சேலம், கிருஷ்ணகிரி, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

சாலை பாதுகாப்பு வார விழா
சாலை பாதுகாப்பு வார விழா
author img

By

Published : Jan 21, 2020, 2:08 PM IST

தமிழ்நாடு முழுவதும் ஜனவரி 20ஆம் தேதிமுதல் 27ஆம் தேதிவரை சாலைப் பாதுகாப்பு வாரவிழா கடைப்பிடிக்கப்படுகிறது. இதனிடையே கிருஷ்ணகிரி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 31ஆவது சாலைப் பாதுகாப்பு வாரவிழா, விழிப்புணர்வுப் பேரணி கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும்வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், விபத்தின்போது உயிரிழப்பைத் தடுக்க அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும், வாகனத்தை இயக்கும்போது கைப்பேசியை பயன்படுத்தக்கூடாது, மது அருந்திவிட்டு வாகனத்தை இயக்கக் கூடாது உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள், விழிப்புணர்வுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி

இந்த விழிப்புணர்வுப் பேரணியில் காவல் துறையினர், பொதுமக்கள் என ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தலையில் தலைக்கவம் அணிந்து தங்களின் இருசக்கர வாகனத்தில் சென்றனர். இதேபோன்று தஞ்சை புதிய பேருந்து நிலையம் பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பேரணியை தஞ்சை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் தொடங்கிவைத்தார்

இது தவிர சேலம், பெரம்பலூர், கடலூர், கரூர், நாமக்கல், திருவாரூர், புதுக்கோட்டை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் நடைபெற்ற சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் பலரும் கலந்துகொண்டனர்.

இதில் விருதுநகர் அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பேருந்து விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது. அதனை விருதுநகர் மண்டல பொது மேலாளர் சிவலிங்கம் தொடங்கிவைத்தார்.

Intro:31-வது சாலை பாதுகப்பு வராவிழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
பண்டி கங்காதர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.Body:31-வது சாலை பாதுகப்பு வராவிழாவினை முன்னிட்டு கிருஷ்ணகிரியில் நடைப்பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 
பண்டி கங்காதர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து சார்பில் 31வது சாலை பாதுகாப்பு வார விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி  கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

மேலும்  இந்த விழிப்புணர்வு பேரணியில் போது வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், விபத்தின்போது உயிரிழப்பை தடுக்க அனைவரும் கட்டாயம் தலைக்கவசம்,

அணிய வேண்டும், வாகனத்தின் சட்டத்திட்டங்களை மதிக்க வேண்டும்,

வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்,

வாகனத்தை இயக்கும் போது கைபேசியை பயன்படுத்தக்கூடாது, ,அபாயகரமான வளைவுகள் வாகனங்களின் வேகத்தை குறைக்க வேண்டும், வாகன 

ஓட்டுனர்கள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் இருக்கவேண்டும் எக்காரணத்தைக் கொண்டும் மது அருந்திவிட்டு வந்து விடாது சீட் பெல்ட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும்,

அனைத்து வாகன ஓட்டுநர்களும் சாலை விதிகளை பின்பற்றி விபத்தில்லா மாவட்டமாக உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகள் மற்றும் விழிப்புணர்வு பிரசுரங்களை பொதுமக்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள் ,

இந்த விழிப்புணர்வு பேரணியின் போது

காவல்துறையினர் பொதுமக்கள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தலையில் தலை கலசம் அணிந்து கலந்து கொண்டனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.