சேலம் மாவட்டம் அணைமேடு பகுதியில் உள்ள ரயில்வே கேட், முள்ளுவாடி ரயில்வே கேட் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன. மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சம்பந்தப்பட்ட இரு ரயில்வே கேட்களில் பராமரிப்பு பணி நடைபெறுவது வழக்கம். அதன்படி அணைமேடு, முள்ளுவாடி கேட்கள், பராமரிப்புக்காக பிப்ரவரி 27, 28 ஆகிய இரு நாட்கள் மூடப்படும் என்றும் சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அறிவிப்பை அடுத்து இரு நாள்களும், அணைமேடு ரயில்வே கேட் நாளை இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரையும், இதே போல் முள்ளுவாடி ரயில்வே கேட் நாளை மறுநாள் இரவு 10 மணி முதல் காலை 6மணி வரையும் மூடப்படும். பராமரிப்புப் பணி நடைபெறும் இரவு நேரத்தில் ரயில்வே கேட்டினை பொதுமக்கள் யாரும் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டுமென சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.