ETV Bharat / city

டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் - 5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள்

சேலம்: செவ்வாய்பேட்டையில் சட்டவிரோதமாகப் பதுக்கப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான நெகிழிப் பொருள்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

5 லட்சம் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள், plastic raid in salem, நெகிழிப் பைகள்
டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருட்கள்
author img

By

Published : Feb 5, 2020, 3:27 PM IST

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியக் கூடிய நெகிழிப் பொருள்களுக்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்துள்ளது. இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு ஒரு ஆண்டு ஆன நிலையிலும் கூட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அவ்வப்போது அலுவலர்கள் மேற்கொள்ளும் திடீர் ஆய்வில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான நெகிழிப்பைகள் சிக்கிய வண்ணமுள்ளன.

இவ்வேளையில், செவ்வாய்பேட்டைப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள நெகிழிப் பொருள்கள் தயாரிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலர்கள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்ட தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள்

இதில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான நெகிழிப் பொருள்களையும் அதன் மூலப்பொருல்களையும் அலுவலர்கள் பறிமுதல் செய்ததோடு, கிடங்கின் மின் இணைப்பையும் துண்டித்தனர். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல் துறையினருக்கு அலுவலர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

Intro:சேலம் செவ்வாய்பேட்டையில் சட்டவிரோதமாக தயாரிக்கப்பட்ட ஐந்து லட்ச ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் கேரி பேக்குகள் மற்றும் மூலப்பொருட்களை மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

Body:ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கி எறியக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்த சட்டம் நடைமுறை படுத்தப்பட்டு ஒரு ஆண்டுகளை கடந்த நிலையில் கூட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக அரசால் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபேக் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. அவ்வப்போது அதிகாரிகள் மேற்கொள்ளும் திடீர் ஆய்வில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பிளாஸ்டிக் பைகள் சிக்கிக்கொண்டனர்.

இந்தநிலையில் செவ்வாய்பேட்டை பகுதியில் உள்ள ஒரு குடோனில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகள் தயாரிக்கப்படுவதாக மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் 5 லட்ச ரூபாய் மதிப்பிலான சட்டவிரோதமாக அதிகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மூலப்பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு குடோனுக்கு மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் அதன் உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யவும் காவல்துறையினருக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர்.

பிளாஸ்டிக் கேரிபேக் தமிழக அரசு தடை விதித்துள்ள போதும் தடையை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் தயாரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்காததால் தமிழகத்தில் தங்குதடையின்றி பிளாஸ்டிக் கழிவுகள் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

பேட்டி: கோபாலகிருஷ்ணன் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொறியாளர், சேலம்)

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.