சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழகத் தொழிலாளர்கள் 400க்கும் மேற்பட்டோர் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஏற்கனவே பல்வேறு கட்டப் போராட்டங்களை தொழிலாளர்கள் நடத்திய நிலையில், பல்கலைக்கழக நிர்வாகம் தொழிலாளர்களை கண்டுகொள்ளவில்லை என்று அவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு ஊதியத்தை நாட்கணக்கில் கணக்கிடாமல் மாத ஊதியமாக வழங்க வேண்டும், மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்து வரும் தினக்கூலி பணியாளார்களை தொகுப்பூதிய பணியாளர்களாக பணி உயர்த்திட வேண்டும், பல்கலைக்கழகப் பணி நேரத்தை பழைய முறைப்படி காலை 10 மணி முதல் மாலை 5. 40 மணி ஆக மாற்ற வேண்டும் என 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பெரியார் பல்கலை. நுழைவு வாயிலில் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தின் சார்பில் தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது பல்கலைக்கழக நிர்வாகத்தை கண்டித்து கண்டன முழக்கங்களை தொழிலாளர்கள் எழுப்பினர் .
இதையும் படிங்க: நீட் ஆள்மாறாட்டம் - தருமபுரி மருத்துவக்கல்லூரி முதல்வர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்!