கரோனா தடைக் காலத்தில் களத்தில் பணியாற்றும் சத்துணவுப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகையும் பயணப்படி வழங்கிட வேண்டும், சமூக சமையலறையில் 62 நாட்களுக்கு உணவு தயாரித்தல் செலவு தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும், ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58-இல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது போல் சத்துணவு சமையல் உதவியாளர்கள் அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 வயது உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கரோனா காலத்தில் சமூக சமையலறையில் பணியாற்ற ஊழியர்களுக்கும், சோதனைச்சாவடி மற்றும் கணக்கெடுப்பு பணியில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் ஊக்கத்தொகையும், பயணப்படியும் வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கை முழக்கங்கள் முன்வைக்கப்பட்டன. இதேபோல சேலம் மாவட்டத்திலுள்ள அயோத்தியாப்பட்டணம், ஏற்காடு , நங்கவள்ளி, ஓமலூர், தலைவாசல், ஆத்தூர் உள்ளிட்ட 13 ஒன்றிய அலுவலகம் முன்பு தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
குடிப்பதற்கு மனைவி பணம் தராததால் கணவன் தற்கொலை!
திருவண்ணாமலையில் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு பெறும் வயது 58இல் இருந்து 59ஆக உயர்த்தப்பட்டது போல் சத்துணவு சமையல் உதவியாளர்கள் அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 வயது உயர்த்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் தகுந்த இடைவெளி கடைப்பிடித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தகுந்த இடைவெளிவிட்டு முறையாக முகக்கவசம் அணிந்து முழக்கங்களை எழுப்பினர்.