சேலம், தாதகாபட்டியில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்று பேசினார். அப்போது அவர், “தமிழ்நாட்டில் வெற்றி நடைபோடும் முதலமைச்சர் ஆட்சிக்கு வரும்வரை மூன்று கோடியாக இருந்த அவரது சொத்து, ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு கோடியாகக் குறைந்துவிட்டது. உலக அளவில் ஊழல் செய்தவர்கள் திமுகவினர். தமிழ்நாட்டில் பாலம் என்றால் லாபம் என்று படிக்கிறார்கள். அதனால்தான் பல இடங்களில் பாலங்களுக்கு பொக்கை விழுந்துவிட்டது.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள், ஒவ்வொரு தொகுதியில் உள்ள பணிகளின் பட்டியலை வாங்கி வந்து தலைமையை அணுகுங்கள். அதுகுறித்து மக்களிடம் விளக்கமளித்து எத்தனை நாள்களில் முடிக்க முடியும் என்பது குறித்து தெரியப்படுத்துங்கள். மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்கள் ஒவ்வாரு தொகுதியிலும் செய்ய முடிகின்ற பணிகளை வாக்குறுதியாகக் கொடுத்து, அவர்களிடம் ஒப்பந்தப் பத்திரத்தில் கையெழுத்தியிட்டுக் கொடுங்கள், சாட்சியாக நானும் கையெழுத்து போடுகிறேன்.
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அரசியல் தொழில் அல்ல, எங்களின் கடமை. மக்களை சந்திக்க தரையில் அங்கபிரதச்சனம் செய்வேன். மக்கள் வாழும் இடம் தான் எனக்கு கோயில், மக்கள் தான் என் மதம். கதை எழுதுபவர்கள் எல்லாம் தமிழ்நாட்டின் இரண்டு கட்சிகளிலும் காலமாகி விட்டனர். தற்போது திறமை உள்ளவர்தான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உள்ளனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...'ஸ்டவ் அடுப்புக்கு டீசல்; சிலிண்டரின் விலை ரூ. 4500' - உளறியக்கொட்டிய திண்டுக்கல் சீனிவாசன்