ETV Bharat / city

ஏற்காடு அண்ணா பூங்கா, படகு இல்ல மேம்பாட்டுப் பணிகளை விரைவுபடுத்த உத்தரவு - அமைச்சர் கே.என்.நேரு - சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம்

ஏற்காடு சுற்றுலா தலத்தில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஏப்.25) திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, அப்பகுதி சாலையோர வியாபாரிகளுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

அமைச்சர் கே.என்.நேரு
அமைச்சர் கே.என்.நேரு
author img

By

Published : Apr 25, 2022, 11:02 PM IST

சேலம்: ஏற்காடு அண்ணா பூங்கா, படகு இல்லம், ரோஸ் கார்டன் சென்ற அமைச்சர் கே.என்.நேரு கோடை விழாவிற்கு நடவு செய்யப்பட்டுள்ள பூஞ்செடிகளை பார்வையிட்டு, விழாவுக்கான ஏற்பாடுகளை விரைவுப்படுத்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது, ஏற்காட்டைச் சேர்ந்த சாலையோர வியாபாரிகள் அமைச்சர் கே.என்.நேருவை சந்தித்து, மீண்டும் சாலையோரம் கடை அமைக்க அனுமதி கேட்டனர் .

அதனைத் தொடர்ந்து, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதைக்கருத்தில் கொண்டு அவர்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன் மேலும், புதிதாக கட்டப்பட்டுள்ள கடைகளில் ஏலம் எடுத்துக்கொள்ளலாம், மீதம் உள்ள நபர்களுக்கு பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கடை அமைப்பதற்கு இடம் ஒதுக்கீடு செய்யப்படும் என உறுதி வழங்கினார்.

அமைச்சர் கே.என்.நேரு ஆய்வு
மேலும், இந்த ஆண்டு கோடை விழா ஐந்து நாட்கள் நடத்துவதற்கானப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அமைச்சர் நேரு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது, சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் உட்பட பலர் உடனிருந்தனர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.