டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து, ஜூன் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தண்ணீர் திறந்து விட்டார். இதனை அடுத்து டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு 10 ஆயிரம் கன அடியிலிருந்து 15 ஆயிரம் கன அடியாக உயர்த்தி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இதன் காரணமாக, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியில் இருந்து, 84 அடியாக தற்போது குறைந்து உள்ளது. தற்போது கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக அம்மாநிலத்தின் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இதற்கிடையில், மேட்டூர் அணையின் 16 கண் மதகு பகுதிகளில் உள்ள கதவுகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தப் பராமரிப்பு பணிகளை நடந்து வருவதை காவிரி வடிநில வட்டம் சிறப்பு தலைமைப் பொறியாளர் ஜெயகோபால் ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது அனைத்து மதகுகளையும் துரிதமாக பராமரிப்பு செய்து கண்காணிக்க வேண்டும், நீர் கசிவு இல்லாமல் இருப்பதற்குத் தகுந்த நடவடிக்கைகள் விரைந்து எடுக்கப்பட வேண்டும் என்று ஜெயகோபால் பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
மேட்டூர் அணையில் பராமரிப்பு பணிகள்: சிறப்புத் தலைமைப் பொறியாளர் ஆய்வு - மேட்டூர் அணையின் பராமரிப்பு பணிகள்
சேலம்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகளில் பராமரிப்பு பணிகளை காவிரி வடிநில வட்ட சிறப்புத் தலைமைப் பொறியாளர் ஜெயகோபால் ஆய்வு மேற்கொண்டார்.