ETV Bharat / city

கிசான் திட்டம் முறைகேடு: கோடிக்கணக்கில் பறிமுதல்! - Kishan Scheme Scam In Salem

சேலம்: கிசான் நிதி உதவி திட்டத்தில் முறைகேடு செய்தவர்களிடமிருந்து ரூ‌. 1 கோடியே 80 லட்சம் திரும்ப பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ராமன் தெரிவித்துள்ளார்.

Collector Raman Press Meet
Collector Raman Press Meet
author img

By

Published : Sep 11, 2020, 6:37 PM IST

சேலம் அரசு பொது மருத்துவமனையில் புதிதாக உருவாக்கப்பட்ட கரோனா சிகிச்சை வார்டில் மாவட்ட ஆட்சியர் ராமன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறுகையில், "சேலம் மாவட்டத்தில் மொத்தம் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நிதியுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிதி திட்டத்தில் முறைகேடுகள் நடந்ததாக வரப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் வங்கியாளர்கள், வருவாய்த் துறை, வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களை ஒருங்கிணைந்து 175 குழுக்கள் அமைக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்கள் இந்த நிதி பெறுவதற்கு தகுதியற்றவர்கள் என கண்டறியப்பட்டு, அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட ரூ. 6 கோடி நிதியுதவியை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், நேற்று (செப்டம்பர் 10) மட்டும் ரூ. 25 லட்சம் நிதி திரும்ப பெறப்பட்டுள்ளது. இதுவரை மொத்தம் ரூ.1.80 கோடி நிதி திரும்ப பெறப்பட்டுள்ளன.

செப்டம்பர் 14ஆம் தேதிக்குள் நிதியை திரும்ப பெறுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டு தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்குள் இந்த நிதியை திரும்ப பெறுவதற்கு காலதாமதம் ஏற்படும் சூழ்நிலை இருந்தால் கால நீட்டிப்பு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, தவறுதலாக வழங்கப்பட்ட அனைத்து நபர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்ட நிதியுதவியை திரும்ப பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை இம்முறைகேட்டில் ஈடுபட்டதாக தனியார் பொது சேவை மையங்களைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இது தொடர்பாக 10க்கும் மேற்பட்ட நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு உரிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்" என்று தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.