ETV Bharat / city

மானக்கேடான செயல்! - செங்கோட்டையன் மீது ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்! - நீட் தேர்வு

சேலம்: நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் அரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது மானக்கேடான செயல் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

rs bharathi
rs bharathi
author img

By

Published : Feb 13, 2021, 7:49 PM IST

சேலத்தில் இன்று சட்டப்பேரவை தேர்தல் பணியாற்றும் திமுக வழக்கறிஞர்கள் களப்பணி அலுவலகம் திறக்கப்பட்டது. இதனை அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாத முதலமைச்சர் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், பல புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே கொடுத்த வாக்குறுதிகளையே இதுவரை அவர் நிறைவேற்றவில்லை.

ஆளுங்கட்சி செய்யும் சட்ட விரோத, அதிகார துஷ்பிரயோகத்தை தடுக்க சட்ட ரீதியாக திமுக வழக்கறிஞர்கள் போராடுவார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததும் எட்டுவழிச் சாலை திட்டம் கைவிடப்படும். மக்கள் நினைக்கும் அனைத்தும் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.

மானக்கேடான செயல்! - செங்கோட்டையன் மீது ஆர்.எஸ்.பாரதி பாய்ச்சல்!

கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்பது உலகறியும். ஆனால், நீட், ஜேஇஇ போன்ற தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்க அரசுப் பள்ளிகளில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லை என்றும், அதனாலேயே தனியார் மூலம் ஆன்லைன் மூலமாக பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக, அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருப்பது மானக்கேடான செயல் மட்டுமல்லாமல், கண்டனத்திற்குரியதும் கூட” என்றார். அப்போது, திமுக சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.எம்.செல்வகணபதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் படிங்க: 'மத்திய அரசு நடத்தும் தேர்வுகளுக்குத் தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் இல்லை'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.