ETV Bharat / city

நான் ராமதாஸ் ஆளு... மதுபோதையில் அரசு மருத்துவர் ரகளை... கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது தாக்கு...

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனை மருத்துவர் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

போதையில் அரசு மருத்துவர் ரகளை - தட்டிகேட்ட செய்தியாளர்கள் மீதும் தாக்குதல்

author img

By

Published : Sep 1, 2022, 10:33 AM IST

சேலம் மாவட்டம் ஏற்காடு அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருபவர் செந்தில்குமார். இவர் நேற்றிரவு (ஆகஸ்ட் 31) இரவு பணியில் இருந்தார். அப்போது ஏற்காடு, முருகன் நகரை சேர்ந்த செல்லையா (77) என்பவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனைக்கு வந்துள்ளார். அந்த நேரத்தில் செந்தில்குமார் மதுபோதையில் இருந்தாக கூறப்படுகிறது.

அப்போது அவர் செல்லையாவை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இதுகுறித்து கேட்ட உறவினர்களிடமும் தகறாறில் ஈடுபட்டுள்ளார். இந்த தகவலையறிந்த உள்ளூர் செய்தியாளர்கள் மருத்துவமனைக்கு விரைந்து, செந்தில்குமாரின் செயல்களை வீடியோ பதிவு செய்தனர். அப்போது செந்தில்குமார் செய்தியாளர்களையும் ஆபாசமாக திட்டி தாக்க முற்பட்டுள்ளார்.

அதன்பின் ஏற்காடு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதனடிப்படையில், போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து நிலைமையை சரிசெய்தனர். இதனிடையே பாதிக்கப்பட்ட நோயாளி செல்லையாவின் குடும்பத்தினர் மருத்துவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:சென்னையில் ரூ.1.85 கோடி ஹவாலா பணம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.