ETV Bharat / city

சேலத்தில் விடிய விடிய மழை! மழைநீரில் சிக்கி தவிக்கும் வீடுகள்!

சேலம்: விடிய விடிய மழை பெய்ததால் சேலத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது.

author img

By

Published : Sep 24, 2019, 3:47 PM IST

Salem

சேலம் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடி, காற்றுடன் விடிய விடிய மழை பெய்தது. இந்நிலையில், சேலம் மாநகராட்சியில் உள்ள 40ஆவது டிவிஷன் பச்சப்பட்டி , ஆறுமுகம் நகர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள், சாலைகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது.

சேலத்தில் விடிய விடிய மழை  மழை நிரில் சிக்கி தவிக்கும் வீடுகள்  சேலம்  Salem  Heavy raining water into houses
மழைநீரில் சிரமப்படும் மக்கள்

சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்துள்ளது. இதனால் இப்பகுதி பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனை அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ், பச்சப்பட்டி பகுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள், தொழிலாளர்கள் ஆகியோரை அனுப்பி மழைநீரை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதையடுத்து அதிகாலை ஐந்து மணி முதல் மாநகராட்சி அலுவலர்கள் பச்சப்பட்டி, ஆறுமுக நகர், அசோக் நகர் பகுதிக்கு வந்து மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுத்தனர். இதுகுறித்து பச்சப்பட்டி பொதுமக்கள் சிலர் கூறுகையில், சிறிய மழை பெய்தாலும் மழை நீர் வீடுகளில் புகுந்துவிடுகிறது. இதை தடுக்க சாக்கடை அடைப்புகளை அகற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

மழைநீரில் சிக்கி தவிக்கும் வீடுகள்

மேலும் சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு பின்வருமாறு, ”மேட்டூர் 89.7 மில்லி மீட்டர், சேலம் 87.7 மில்லி மீட்டர், வாழப்பாடி 85 மில்லி மீட்டர், ஓமலூர் 23.4 மில்லி மீட்டர், கொல்லிமலை 58 மில்லி மீட்டர், எடப்பாடி 49. 4 மில்லி மீட்டர், ஆத்தூர் 45.7 மில்லி மீட்டர், தம்மம்பட்டி 30.6 மில்லி மீட்டர், காடையாம்பட்டி 29.6 மில்லி மீட்டர், ஏற்காடு 29 மில்லி மீட்டர், வீரகனூர் 19.2 மில்லி மீட்டர், சங்ககிரி 17.1 மில்லி மீட்டர்.

Intro: சேலத்தில் விடிய விடிய மழை பச்சப்பட்டி பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

Body:சேலத்தில் விடிய விடிய பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் சேலம் பச்சபட்டி பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்தது.

சேலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் திங்கள் இரவு 9 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பலத்த இடி மற்றும் காற்றுடன் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய பெய்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு மேட்டூர் 89.7 மில்லிமீட்டர் சேலம் 87.7 மில்லி மீட்டர் வாழப்பாடி 85 மில்லி மீட்டர் ஓமலூர் 23.4 மில்லி மீட்டர் கொல்லிமலை 58 மில்லிமீட்டர் எடப்பாடி 49. 4 மில்லி மீட்டர் ஆத்தூர் 45.7 மில்லி மீட்டர் தம்மம்பட்டி 30.6 மில்லி மீட்டர் காடையாம்பட்டி 29.6 மில்லி மீட்டர் ஏற்காடு 29 மில்லி மீட்டர் வீரகனூர் 19.2 மில்லிமீட்டர் சங்ககிரி 17.1 மில்லிமீட்டர்.

சேலம் மாநகராட்சியில் உள்ள 40 ஆவது டிவிஷன் இல் பச்சப்பட்டி மற்றும் ஆறுமுகம் நகர் அஷோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வீடுகள் மற்றும் சாலைகளில் தேங்கி நிற்கிறது சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் புகுந்து இதனால் இந்த பகுதி பொதுமக்கள் பெரிதும் சிரமம் அடைந்தனர். இதனை அறிந்த சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் பச்சப்பட்டி பகுதிக்கு மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துப்புரவு தொழிலாளர்களை அனுப்பி மழைநீர் வெளியேற்ற நடவடிக்கை எடுத்தார். இதனை அடுத்து அதிகாலை 5 மணி முதல் மாநகராட்சி அதிகாரிகள் பச்சப்பட்டி ஆறுமுக நகர் அஷோக் நகர் பகுதிக்கு வந்து மழை நீர் வடிய உரிய நடவடிக்கை எடுத்தனர்.

இதுகுறித்து பச்சப்பட்டி பொதுமக்கள் சிலர் கூறும்போது சிறிய மழை பெய்தாலும் மழை நீர் வீடுகளில் புகுந்து விடுகிறது இதை தடுக்க சாக்கடை அடைப்புகளை அகற்றி விட வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.

பொதுமக்கள் பேட்டி உள்ளது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.