சேலம்: 29ஆவது மெகா கரோனா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஏற்காட்டில் இன்று (மே8) தொடங்கி வைப்பதற்காக சேலம் வந்தார்.
இன்று காலை ஏற்காடு மலைப்பாதையில் அமைச்சர் சுப்ரமணியன் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது ஏற்காடு அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் முறையாக செய்யப்பட்டுள்ளதா? மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உரிய நேரத்திற்கு பணிக்கு வருகின்றனரா? என்பது குறித்து நேரடி ஆய்வு நடத்தினார்.
மேலும், மருத்துவமனையில் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள், மருந்து கையிருப்பு விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கான படுக்கைகள் ஆகியவற்றையும் ஒவ்வொரு பிரிவாக சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அமைச்சரின் இந்த ஆய்வின்போது சட்டப்பேரவை உறுப்பினர் ராஜேந்திரன் உடனிருந்தார்.
இதையும் படிங்க: 'இலங்கைக்கு அனுப்பப்படும் அரிசி குறித்து அவதூறு பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை: அமைச்சர் எச்சரிக்கை'