ETV Bharat / city

GOLD THEFT - நகைப் பட்டறையில் நகை, பணம் கொள்ளை

சேலம் டவுனில் முகமூடி அணிந்த கொள்ளையர்கள், நள்ளிரவில் தங்க நகைப் பட்டறையின் பூட்டை உடைத்து பணம், நகைகளைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.

நகை பட்டறையில் நகை, பணம் கொள்ளை
நகை பட்டறையில் நகை, பணம் கொள்ளை
author img

By

Published : Dec 31, 2021, 5:22 PM IST

சேலம்: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிக்கில் பட்டேல். இவர் சேலம் டவுனில் கடந்த 18 ஆண்டுகளாக தங்கத்தின் தரத்தை மதிப்பீடு செய்யும் பரிசோதனை பட்டறை நடத்திவருகிறார். நேற்று நள்ளிரவில் பட்டறையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்த முகமுடி கொள்ளையர்கள் லாக்கரில் இருந்த இரண்டு லட்சம் ரூபாய் பணம், இரண்டு சவரன் தங்கம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

இது குறித்து தகவலறிந்த சேலம் டவுன் காவல் துறையினர், சம்பவ இடத்திற்குச் சென்று தடயவியல் வல்லுநர்கள் மூலம் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். இதனிடையே இந்தக் கொள்ளைச் சம்பவம் தொடர்பான கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சிகள் வெளியாகியுள்ளன.

நகைப் பட்டறையில் நகை, பணம் கொள்ளை

அதனடிப்படையில் கொள்ளை கும்பலை காவல் துறையினர் தேடிவருகின்றனர். டவுன் காவல் நிலையம் அருகே ஏராளமான நகைக் கடைகள் அடுத்தடுத்து அமைந்துள்ள பகுதியில் நடைபெற்ற இந்தக் கொள்ளைச் சம்பவம் அப்பகுதி வியாபாரிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: Robbery: இருசக்கர வாகனத்திலிருந்து ரூ.4 லட்சம் பணம் கொள்ளை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.