சேலம் குரங்குச்சாவடி பகுதியிலுள்ள தேநீர் விடுதியில் ஒன்று கூடியுள்ள கும்பல், சிவப்பு பாதரசம் வைத்துக்கொண்டு, அதை கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்வது தொடர்பாக பேசி வருவதாகவும் சேலம் மாநகர காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சேலம் மேற்கு சரக காவல்துறை உதவி ஆணையர் பூபதிராஜா தலைமையில் காவல் துறையினர் சாதாரண உடையில் தேநீர் விடுதிக்குச் சென்று அந்த கும்பல் குறித்து தகவல் சேகரிக்க சென்றனர்.
இரிடியம் என்று பித்தளைக் குடத்தைக் காட்டி பல கோடி ரூபாய் மோசடி
அப்போது அவர்கள் மோசடி கும்பல் என தெரியவந்ததும், அங்கிருந்த ஐந்து பேரையும் பிடித்து வந்து விசாரணை நடத்தினர். அதில் இந்த ஐந்து பேரும் வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதில் நீலகிரி மாவட்டம் கோத்தகிரிப் பகுதியைச் சேர்ந்த கண்ணதாசன் என்ற சித்த மருத்துவர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் தங்களிடம் சிவப்பு பாதரசம் இருப்பதாகவும், பெங்களூரு பகுதியிலிருந்து வரவழைக்கப்பட்டு உள்ளதாகவும், இந்த சிவப்பு பாதரசம் என்பது புற்று நோயை குணப்படுத்திட உதவும் அரிய மருந்து என்றும் கூறினர்.
திருமணமான 15ஆம் நாளே மனைவியை துரத்திய கணவன்!
இது தவிர இந்த சிவப்பு பாதரசமானது அணு ஆயுதம் தயாரிக்க பயன்படுத்திட முக்கிய பொருள் என்றும் இதன் ஒரு மில்லி கிராம் சுமார் மூன்று கோடி ரூபாய் எனவும், இதனை பல கோடி ரூபாய்க்கு விற்பனை செய்திடாலம் என்றும் கூறி வாட்ஸ் ஆப் செயலி மூலமாக சிவப்பு பாதரசத்தின் செயல்பாடுகளை காண்பித்து இருந்தது தெரியவந்தது.
இதனை வாங்கிட எங்களிடம் பணம் உள்ளது என முன்னாள் ராணுவ வீரர் தங்கபாண்டியன், பொறியியில் பட்டதாரியான பாண்டியராஜன், புருஷோத்தமன் ஆகியோர் வாட்ஸ் ஆப்பில் பெட்டியினுள் கட்டு கட்டாக இருக்கும் பணத்தை பாதரச கும்பலிடம் காட்டியுள்ளனர்., இதில் சுவாரசிய தகவல் என்னவென்றால், இந்த இரு கும்பலிடமும் சிவப்பு பாதரசமோ, பெட்டி பெட்டியாக பணமோ இல்லை என்பது தான்.
இரிடியம் மோசடி வழக்கில் 4 பேர் கைது!
இதைத் தொடர்ந்து மோசடி சம்பவத்தில் ஈடுபட முயன்ற முன்னாள் ராணுவ வீரர் உள்ளிட்ட ஐந்து பேரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த கும்பல் சிவப்பு பாதரசம் என்ற பெயரில் வேறு இடங்களில் மோசடி செய்துள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து சேலம் மாநகர காவல் துணை ஆணையர் செந்தில்குமார் கூறும்போது, மண்ணுளி பாம்பு, இருடியம், போன்றவை வரிசையில் தற்போது சிவப்பு பாதரசம் என்ற பெயரில் மோசடி செய்திட கும்பல் சுற்றித் திரிகிறது. இது போன்றவைகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம். இரு தரப்பினராக உள்ள இந்த கும்பல் தனித்தனியாக ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவை காவல்துறையினரின் முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டு உள்ளது, என்றார்.