ETV Bharat / city

பாஜக அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் பாதாளத்திற்கு சென்றுவிட்டது - தங்கபாலு

சேலம்: மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்றுவிட்டதாக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி தங்கபாலு குற்றஞ்சாட்டியுள்ளார்.

author img

By

Published : Nov 23, 2019, 7:33 PM IST

former congress president thangabalu

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்துக் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.வி. தங்கபாலு கூறுகையில், "தற்போது மத்தியில் ஆட்சி நடத்திவரும் பாஜக தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளைச் செயல்படுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுக்க மக்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர். நேற்று கூட இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தவறான திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார்.

உள்ளாட்சி உங்களாட்சி 4 - ஊராட்சி நிர்வாகத்தின் பொறுப்பு

நாட்டின் இறக்குமதியைக் குறைத்து, ஏற்றுமதியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். ஆனால் இறக்குமதிதான் தற்போது அதிகம் செய்யப்படுகிறது. இதனால் இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. விவசாயிகளின் கடன்களை உடனடியாக எந்தவித சுணக்கமும் இன்றி மத்திய அரசு தள்ளுபடி செய்து விவசாயிகளைப் பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

கே.வி தங்கபாலு தலைமையில் ஆர்ப்பாட்டம்

Intro:மத்திய பாஜக அரசின் தவறான பொருளாதார கொள்கையால் இந்தியாவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு சென்று விட்டதாக முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கேள்வி தங்கபாலு குற்றம்சாட்டியுள்ளார்.

Body:சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.வி. தங்கபாலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தின்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கே.வி. தங்கபாலு கூறுகையில்," தற்போது மத்தியில் ஆட்சி நடத்தி வரும் பாஜக தலைமையிலான அரசு மக்கள் விரோத கொள்கைகளை செயல்படுத்தி வருகிறது.

இதனால் இந்தியா முழுக்க மக்கள் கடுமையான பாதிப்படைந்துள்ளனர் . நேற்று கூட இந்தியாவின் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஒரு தவறான திட்டத்தினை செயல்படுத்தி இருக்கிறார்.

நாட்டின் இறக்குமதியை குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்க செய்ய வேண்டும். ஆனால் இறக்குமதி தான் தற்போது அதிகம் செய்யப்படுகிறது .இதனால் இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது.

விவசாயிகளின் கடன்களை உடனடியாக எந்தவித சுணக்கமும் இன்றி மத்திய அரசு தள்ளுபடி செய்ய செய்து விவசாயிகளை பாதுகாக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

Conclusion:இந்த ஆர்ப்பாட்டத்தில் சேலம் காங்கிரஸ் கமிட்டி மாநகர தலைவர் ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.