சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து சேலத்தில், பாதிக்கப்படும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், சேலம் - சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் , மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அப்போது, காவிரி - சரபங்கா நீரேற்று திட்டத்தை விவசாய நிலங்கள் வழியே கொண்டு செல்வதை கைவிட்டு, நீர்வழிப் பாதை வழியே கொண்டு செல்ல வேண்டும்.
ஐடிபிஎல் பெட்ரோலிய குழாய்களை விவசாய நிலம் வழியே கொண்டு செல்லாமல் நெடுஞ்சாலைகள் வழியே கொண்டு செல்ல வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையும் படிங்க: சிதிலமடைந்த சாலைகள்: சீரமைக்கக் கோரும் பழங்குடியினர்!