ETV Bharat / city

தொடங்கியது ஆடி மாதம் - விமரிசையாக நடைபெற்ற எருது விழா! - எருது விடும் விழா

சேலம்: நெய்க்காரன்பட்டியில் வெகு விமரிசையாக நடைபெற்ற கோயில் திருவிழாவில் எருது விடும் விழா கோலகலமாக நடைபெற்றது. இதில் 75 எருதுகள் கலந்து கொண்டன.

எருது விழா
author img

By

Published : Jul 18, 2019, 11:35 PM IST

சேலம் மாவட்டம் நெய்க்காரன்பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில் மூங்கில் குத்து முனியப்பன் சாமி கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம். இதனையொட்டி கோயில் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக எருது விடும் விழா இன்று நடைபெற்றது. இதற்காக, தருமபுரி, கிருஷ்ணகிரி ,சேலம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 75க்கும் மேற்பட்ட எருதுகள் பிடித்து வரப்பட்டன.

இளைஞர்கள் கொண்டாட்டம்

எருது விடும் விழாவில் திரளாக கலந்துகொண்ட இளைஞர்கள் எருதுகளை கயிற்றால் பிடித்து இழுத்து வந்து திடலில் சுற்றி வந்து அழைத்துச் சென்றனர். எருது விடும் விழாவை காண அப்பகுதியைச் சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வேடிக்கை பார்த்தனர்.

Intro:சேலம் அருகே நெய்க்காரப்பட்டியில் கோவில் திருவிழாவில் எருது விடும் விழா நடைபெற்றது. இதில் 75 எருதுகள் கலந்து கொண்டன.Body:

சேலம் அருகே கோவில் திருவிழாவில் எருது விடும் விழா நடந்தது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விழாவை பார்த்து ரசித்தர்.

சேலம் அடுத்த கொண்டலாம்பட்டி அருகில் உள்ள நெய்க்காரப் பட்டியில் ஒவ்வொரு ஆண்டும், ஆடி மாதத்தில் மூங்கில் குத்து முனியப்பன் சாமி கோவில் திருவிழா நடத்தப்படுவது வழக்கம்.

இதுபோல கடந்த சில நாட்களாக கோவிலில் திருவிழா நடந்து வருகிறது .

இதனை ஒட்டி , கோவில் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான எருதுவிடும் விழா இன்று நடைபெற்றது.

இதற்காக தர்மபுரி, கிருஷ்ணகிரி ,சேலம் மாவட்டங்களில் இருந்து 75க்கும் மேற்பட்ட எருதுகள் பிடித்து வந்து கோவில் அருகே உள்ள திடலில் விடப்பட்டது.

திரளான இளைஞர்கள் எருதுகளை கயிற்றால் பிடித்து இழுத்து வந்து திடலில் சுற்றி வந்து பின்னர் அழைத்துச் சென்றனர் .

இந்த எருது விடும் விழாவை காண சேலம் கொண்டலாம்பட்டி, பூலாவரி, நெய்க்காரப்பட்டி, ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வந்து வேடிக்கை பார்த்துச் சென்றனர்.

Conclusion:
எருதுவிடும் விழா
சேலம் –கோவை தேசிய நெடுஞ்சாலை அருகில் நடந்ததால் சேலம் டவுன்உதவி கமிஷனர் ஈஸ்வரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது .
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.